சுற்றுலா அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் சிறுதானிய உணவுத் திருவிழா: 2023 ஏப்ரல் 13 முதல் 19 ஆம் தேதி வரை மும்பையில் மத்திய சுற்றுலா அமைச்சகம் நடத்துகிறது

प्रविष्टि तिथि: 13 APR 2023 3:53PM by PIB Chennai

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் சிறுதானிய உணவுத் திருவிழாவை 2023 ஏப்ரல் 13 முதல் 19 ஆம் தேதி வரை மும்பையில் மத்திய சுற்றுலா அமைச்சகம் நடத்துகிறது. மும்பை தாஜ்மஹால் பேலஸில் நடைபெறும் இந்த உணவுத் திருவிழாவில் கஜகஸ்தான், கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், ரஷ்யா ஆகிய ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த சமையல் கலைஞர்கள் பங்கேற்று தங்களது சிறுதானிய சமையல் வகைகளை காட்சிப்படுத்துகின்றனர்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பிற்கு இந்த ஆண்டில் இந்தியா தலைமைத்துவத்தை ஏற்றுள்ள நிலையில், இந்தியாவின் பரிந்துரையின் அடிப்படையில் சர்வதேச சிறுதானிய ஆண்டாகவும், இந்த ஆண்டை ஐநா அறிவித்துள்ளது. சிறுதானிய உணவு வகைகளை ஊக்குவிப்பதை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில் இவற்றை ஊக்குவிக்க சுற்றுலா அமைச்சகமும், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக நடத்தப்படும். இந்த உணவுத் திருவிழா, சிறுதானிய உணவு வகைகளின் பயன்பாட்டை அதிகரிப்பது குறித்த விழிப்புணர்வை  ஏற்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

                                                ***

AP/PLM/MA/KPG

 


(रिलीज़ आईडी: 1916243) आगंतुक पटल : 243
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Telugu