வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
புதுதில்லி, கஸ்தூர்பா காந்தி மார்கில் பொதுத் தொகுப்பு அலுவலக வளாகம்-2, முகமதுபூர் மற்றும் தியாகராஜ்நகரில் பொதுத்தொகுப்பு குடியிருப்பு வளாகம் தொடங்கப்பட்டது (12 ஏப்ரல் 2023)
प्रविष्टि तिथि:
12 APR 2023 3:26PM by PIB Chennai
புதுதில்லி, கஸ்தூர்பா காந்தி மார்கில் பொதுத் தொகுப்பு அலுவலக வளாகம்-2, முகமதுபூர் மற்றும் தியாகராஜ்நகரில் பொதுத்தொகுப்பு குடியிருப்பு வளாகம் ஆகியவற்றை மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற மேம்பாடு, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் திரு ஹர்தீப் எஸ் பூரி இன்று (12 ஏப்ரல் 2023) தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் கூடியிருந்தோரிடைய உரையாற்றிய அமைச்சர், மறுஉருவாக்கம் செய்யப்பட்டுள்ள இந்தக் காலனிகள், 2019-ல் பிரதமர் நரேந்திர மோடியால் அறிவிக்கப்பட்ட உலகளாவிய வீட்டுவசதித் தொழில்நுட்ப சவால் என்ற தொழில் நுட்பங்களிலிருந்து நவீன, நீடிக்கவல்ல, விரைந்த கட்டுமான தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளன என்றார். இந்த மூன்று திட்டங்களிலும் நூறு சதவீத சூரிய மின்சக்தி உற்பத்தி, கழிவுநீரை மறுசுழற்சி செய்வது, மழைநீர் சேகரிப்பு ஆகியவை மத்திய பொதுப்பணித்துறை பயன்படுத்தியுள்ள சிறப்பம்சங்கள் என்பதை அவர் எடுத்துரைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் தில்லி துணைநிலை ஆளுநர் திரு வினய் குமார் சக்சேனா, வெளியுறவு மற்றும் கலாச்சாரத்துறை இணையமைச்சர் திருமதி மீனாட்சி லேகி, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சக செயலாளர் திரு மனோஜ் ஜோஷி, மத்திய பொதுப்பணித்துறையின் தலைமை இயக்குநர் திரு சைலேந்திர சர்மா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கஸ்தூர்பா மார்கில் 61,454 சதுரஅடி பரப்பில் நவீன தொழில்நுட்பத்துடன் பொதுத்தொகுப்பு அலுவலக வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. புதிதாக கட்டப்பட்டுள்ள பொதுத்தொகுப்பு குடியிருப்பு வளாகத்தை பொறுத்தவரை முகமதுபூரில் 708 குடியிருப்புகளும், தியாகராஜ்நகரில் 703 குடியிருப்புகளும் கட்டப்பட்டுள்ளன.
தரமும், சிக்கனமும் என்ற மத்திய பொதுப்பணித்துறையின் பாரம்பரியப்படி, முகமதுநகர் கட்டுமானத்திற்கு அனுமதிக்கப்பட்ட ரூ.362 கோடியில் 25 சதவீதமும், தியாராஜ்நகர் கட்டுமானத்திற்கு அனுமதிக்கப்பட்ட ரூ.392 கோடியில் 30 சதவீதமும் மிச்சப்படுத்தப்பட்டுள்ளது.
***
AP/SMB/RS/KPG
(रिलीज़ आईडी: 1915946)
आगंतुक पटल : 196