உள்துறை அமைச்சகம்

இந்தியா – யு.கே உள்துறைகளின் 5-வது பேச்சுவார்த்தை

Posted On: 12 APR 2023 3:01PM by PIB Chennai

5-வது இந்தியா மற்றும்  இங்கிலாந்து நாடுகளின் உள்துறைகளின் பேச்சுவார்த்தை புதுதில்லியில் இன்று நடைபெற்றது. இந்தியக்குழுவுக்கு மத்திய உள்துறை செயலாளர் திரு அஜய்குமார் பல்லாவும், இங்கிலாந்து நாட்டின் குழுவுக்கு அந்நாட்டின் உள்துறை அலுவலக நிரந்தர செயலர் சர் மேத்யூ ரைகிராப்ட்டும் தலைமை ஏற்கின்றனர். இந்தக் கூட்டத்தில் இரு நாடுகளின் மூத்த அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர்.

இந்தக் கூட்டத்தில் இருதரப்பும், ஏற்கனவே நிலவும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆய்வு செய்தன. பயங்கரவாத தடுப்பு இணையவெளிப் பாதுகாப்பு, உலக விநியோகச் சங்கிலிகள், போதை மருந்து கடத்தல், புலம்பெயர்தல், நாடு கடத்தல், காலிஸ்தான் ஆதரவு  உள்ளிட்ட இங்கிலாந்தில் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் வாய்ப்புகளை உருவாக்கவும், மேலும் நடவடிக்கைகள் எடுப்பது பற்றி ஆராயப்பட்டது.

 இங்கிலாந்து புகலிடம் பெறுதலை காலிஸ்தான் ஆதரவு சக்திகள் தவறாக பயன்படுத்துவது குறித்த பிரச்சனையை இந்தியா குறிப்பாக எழுப்பியது. காலிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவில் பயங்கரவாத நடவடிக்கைகளை  ஊக்குவிக்க முயற்சி மேற்கொள்வதாகவும், அதற்கு எதிராக சிறந்த ஒருங்கிணைப்பு அவசியம் என்றும் இந்தியா வலியுறுத்தியது. இத்தகைய சக்திகளுக்கு எதிராக உரிய தீவிர நடவடிக்கை தேவை என்பது இந்தியாவின் கருத்தாகும்.  இந்தியத் தூதரகங்களின் பாதுகாப்புக் குறித்த கவலையையும் இந்தியா வெளியிட்டது.

இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு குறித்து இருதரப்பும் திருப்தி வெளியிட்டன. இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்த இரு நாடுகளும் ஒப்புக் கொண்டதுடன், இருநாடுகளுக்குமிடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்கவும் இசைவு தெரிவிக்கப்பட்டது.

***

  AP/PKV/AG/RR



(Release ID: 1915898) Visitor Counter : 139


Read this release in: English , Odia , Urdu , Marathi