சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சிறுபான்மை சமுதாய நலனுக்கானத் திட்டம்

प्रविष्टि तिथि: 29 MAR 2023 5:04PM by PIB Chennai

சிறுபான்மையினர் உட்பட அனைத்துப்பிரிவினரின் மேம்பாட்டுக்காக பல்வேறு நலத்திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. பொருளாதார ரீதியில் நலிவடைந்த விளிம்புநிலை சமுதாயத்தினர்  ஆகியோரின் நலனுக்காக திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம், ஜவுளி அமைச்சகம், கலாச்சார அமைச்சகம், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், ஊரக மேம்பாட்டு அமைச்சகம் ஆகியவற்றின் மூலம் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

சிறுபான்மையினர் நல அமைச்சகம்  குறிப்பாக நாடு முழுவதும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மத்திய அளவில் சிறுபான்மையினர் சமுதாயமாக அறிவிக்கப்பட்ட ஆறு பிரிவினரின் சமூகப்பொருளாதாரம் மற்றும் கல்வி அதிகாரம் அளித்தலுக்கும் இந்த திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

கல்வி, அதிகாரமளித்தல் திட்டங்கள், வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார அதிகாரமளித்தல் திட்டங்கள், சிறப்பு திட்டங்கள், உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்கள் ஆகியவை இதில் அடங்கும்.

மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி சுபின் இரானி மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

 

***

AP/PKV/AG/RR


(रिलीज़ आईडी: 1915850) आगंतुक पटल : 140
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Punjabi , Telugu