சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சர்வதேசப் புலிகள் கூட்டணி

Posted On: 10 APR 2023 6:02PM by PIB Chennai

ஏழு பெரிய பூனை இனங்கள் எனப்படும் புலி, சிங்கம், சிறுத்தை, பனிச்சிறுத்தை, சீட்டா, ஜாகுவார், பூமா ஆகியவற்றின் பாதுகாப்புக்காக சர்வதேசப் புலிகள் கூட்டணியை கர்நாடகாவின் மைசூருவின் புலிகள் திட்டத்தின் 50 ஆண்டுகளை நினைவுகூரும் நிகழ்வில், 2023 ஏப்ரல் 9 அன்று பிரதமர் தொடங்கிவைத்தார். இந்த இனங்களை பாதுகாக்க 97 நாடுகளை அணுகுவது இந்தக்கூட்டணியின் நோக்கமாகும்.

புலிகள் பாதுகாப்பில் உலகளாவிய நிலைமை குறித்த அமைச்சர்கள் நிலையிலான அமர்வுக்கு தலைமை தாங்கிய மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ், இந்தக்கூட்டணி புலிகள் பாதுகாப்பு குறித்த உலகளாவிய முயற்சிகள் மற்றும் பங்களிப்புகளை வலுப்படுத்தும் என்றார்.

புலிகள் பாதுகாப்பில் இந்தியாவின்  தலைமைத்துவத்தை பல நாடுகள் பாராட்டியிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார். பூடான், ங்கதேசம், கம்போடியா, கென்யா, நேபாளம், எத்தியோப்பியா, சுரினாம், அர்மீனியா, தான்சானியா, நைஜீரியா, வியட்நாம், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகள் பாராட்டி செய்திகள் அனுப்பியிருப்பதாக திரு பூபேந்திர யாதவ் தெரிவித்தார்.

 

 

***

AD/SMB/RS/KPG


(Release ID: 1915433) Visitor Counter : 274


Read this release in: English , Urdu , Hindi , Marathi