பாதுகாப்பு அமைச்சகம்

கோப் இந்தியா 2023 பயிற்சி

Posted On: 10 APR 2023 4:09PM by PIB Chennai

இந்திய விமானப்படை, அமெரிக்க விமானப்படை இடையேயான கோப் இந்தியா 2023 எனும் இருதரப்பு பயிற்சி அர்ஜன்சிங் (பனாகர்), கலைக்குண்டா, ஆக்ரா ஆகிய இடங்களில் உள்ள விமானப்படை தளங்களில் நடைபெற்றது. இந்தப் பயிற்சி இருநாடுகளின் விமானப் படைகளுக்கிடையே பரஸ்பர புரிதலை அதிகரிப்பதையும் தங்களின் சிறந்த நடைமுறைகளை பகிர்ந்துகொள்வதையும், நோக்கமாகக் கொண்டது.

இந்தப் பயிற்சியின் முதல் கட்டம் இன்று தொடங்கியது. இந்தப்பயிற்சியில் பார்வையாளராக ஜப்பான் வான்வழி தற்காப்புப் படையைச் சேர்ந்த வீரர்களும் பங்கேற்கின்றனர்.

 

***

AD/SMB/RS/KPG



(Release ID: 1915416) Visitor Counter : 183


Read this release in: English , Urdu , Marathi , Hindi