குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

நாட்டின் நலனுக்காக குடிமக்கள் நாள்தோறும் ஒரு மணிநேரம் தங்களது உடல்நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என்று குடியரசுத் துணைத்தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்

प्रविष्टि तिथि: 10 APR 2023 4:05PM by PIB Chennai

நாட்டின் நலனுக்காக குடிமக்கள் நாள்தோறும் ஒரு மணிநேரம் தங்களது உடல்நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என்று  கேட்டுக்கொண்டுள்ளார். உலக ஹோமியோபதி தினத்தையொட்டி புதுதில்லி விஞ்ஞான் பவனில் இன்று நடைபெற்ற அறிவியல் மாநாடு தொடக்க நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர் இதனை தெரிவித்தார்.

நமது நாட்டில் 200 ஆண்டு பாரம்பரியம் கொண்ட ஹோமியோபதி மருத்துவம் கடந்த சில ஆண்டுகளாக நமது உடல் ஆரோக்கியத்தில் முக்கிய காரணியாக விளங்குகிறது என்று அவர் கூறினார்.  ஹோமியோபதி இயற்கையுடன் இணைக்கிறது என்றும் உலகில்
2-வது மிகப்பெரிய விரைவாக வளர்ச்சியடைந்து வரும் மருத்துவமுறை
ஹோமியோபதி என்பதை உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 

***

AD/IR/RJ/KPG


(रिलीज़ आईडी: 1915375) आगंतुक पटल : 189
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi