வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

தெலுங்கானா காய்கறி கழிவுகளில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்கிறது

Posted On: 09 APR 2023 1:52PM by PIB Chennai

ஐதராபாத்தின் போவன்பல்லி சப்ஜி மண்டியின் புதுமையான முயற்சிகளை மனதின் குரல் (மன் கி பாத்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டினார்.

 

போவன்பல்லி காய்கறி சந்தை அதன் புதுமையான கழிவு மேலாண்மை அமைப்புக்காக பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்தை ஈர்த்துள்ளது. மன் கி பாத் நிகழ்ச்சி ஒன்றின் போது உயிரி மின்சாரம், உயிரி எரிபொருள் மற்றும் உயிரி உரம் உருவாக்கும் திட்டத்தை பிரதமர் பாராட்டினார். சந்தையின் கழிவுகள் தற்போது செல்வமாக மாறி வருவதாகக் கூறிய பிரதமர், "சப்ஜி மண்டிகளில், காய்கறிகள் பல காரணங்களால் அழுகுவதையும், சுகாதாரக்கேடு பரவுவதையும் கண்டோம். இருப்பினும், ஹைதராபாத்தில் உள்ள போவன்பல்லி சப்ஜி மண்டியில் உள்ள வியாபாரிகள் காய்கறிக் கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்க முடிவு செய்தனர்." இதுவே புதுமை சிந்தனையின் சக்தியாகும்" என்று பிரதமர் குறிப்பிட்டிருந்தார்.

 

 போவன்பல்லி காய்கறி சந்தை, இந்த சந்தையில் இருந்து சேகரிக்கப்படும் காய்கறி மற்றும் பழ கழிவுகள் சுமார் 500 யூனிட் மின்சாரம் மற்றும் 30 கிலோ உயிரி எரிபொருளை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படுகிறது. உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தெருவிளக்குகள், 170 கடைகள், ஒரு நிர்வாக கட்டிடம் மற்றும் நீர் விநியோக இணைப்பு ஆகியவற்றிற்கு மின்சாரம் வழங்குகிறது. இதற்கிடையில், உற்பத்தி செய்யப்படும் உயிரி எரிபொருள் சந்தையின் வணிக சமையலறைக்கு செலுத்தப்படுகிறது. அதே நேரத்தில் இந்த உணவு விடுதியும் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் இயங்குகிறது. சராசரியாக 400 யூனிட் மின்சாரம் தயாரிக்கும் வகையில் இங்கு கழிவுகள் உருவாகின்றன. இதன் விளைவாக, சந்தையும் தூய்மையாக பாதுகாக்கப்படுகிறது.

 

 கழிவுகளை தரம் பிரித்தல், பிரித்தெடுத்தல், இயந்திரங்களை இயக்குதல் மற்றும் நிர்வாகப் பணிகளை நிர்வகித்தல் போன்ற பல்வேறு பணிகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளை பெண்களுக்கு வழங்குகிறது. இந்த ஆலை பெண் தொழிலாளர்களுக்கு நிலையான வருமானம் மற்றும் திறன் மேம்பாட்டுக்கான வாய்ப்பை வழங்குகிறது.

 

போவன்பல்லி காய்கறி சந்தையில் கழிவுகளை ஆற்றலாக மாற்றும் இந்த புதுமையான நடைமுறையானது, உயிரி எரிபொருளை உருவாக்க ஒரு நிலையான அமைப்பைப் பயன்படுத்துவது குறித்த பெரிய அளவிலான விழிப்புணர்வை உருவாக்கியுள்ளது, மேலும் நகர்ப்புற நிலப்பரப்பை மாற்றுவதற்கு இதுபோன்ற திட்டங்களை மேற்கொள்ள பல நகரங்களை ஊக்குவிக்கிறது.

***

SM/CJL/DL



(Release ID: 1915067) Visitor Counter : 234


Read this release in: English , Urdu , Hindi , Telugu