குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

ஈஸ்டர் திருநாளையொட்டி மக்களுக்கு குடியரசு துணைத்தலைவர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 08 APR 2023 3:17PM by PIB Chennai

ஈஸ்டர் திருநாளையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசு துணைத்தலைவர் திரு ஜெகதீப் தன்கர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

அவரது வாழ்த்துச் செய்தி வருமாறு:

“ஈஸ்டர் திருநாளையொட்டி நமது நாட்டு மக்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கிறிஸ்து பிரான் உயிர்த்தெழுந்ததை ஈஸ்டர் திருநாள் குறிக்கிறது. அன்பு, கருணை, மன்னித்தல் ஆகியவற்றின் ஆற்றலை இது நினைவு கூர்கிறது.

ஈஸ்டர்  திருநாள் உணர்வு அனைவரையும் ஒன்று சேர்ப்பதுடன் நல்லிணக்கத்தையும் அமைதியையும் உருவாக்கட்டும். மனித குலத்திற்கு  புதிதாக சேவை செய்வதற்கு நம்மை அர்ப்பணித்துக் கொள்ள ஊக்கமளிக்கட்டும்”

-----

SM/PKV/KPG/DL


(வெளியீட்டு அடையாள எண்: 1914885) வருகையாளர் எண்ணிக்கை : 177
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi