சுற்றுலா அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2021-ம் ஆண்டில் 15.2 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்(FTAs) இந்தியாவுக்கு வருகை தந்த நிலையில் இந்த எண்ணிக்கை 2022-ம் ஆண்டில் 61.9 லட்சமாக உயர்வு

Posted On: 07 APR 2023 10:53AM by PIB Chennai

கொரோனா தொற்றுக்கு முன்பு 2019-ம் ஆண்டு 1.93 கோடி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் (FTAs) இந்தியாவிற்கு வந்துள்ளனர். குடியேற்றப் பணியகத்திலிருந்து பெறப்பட்ட அண்மைத் தகவல்களின்படி, 2022-ம் ஆண்டில் இந்தியா 61.9 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்தியா வந்துள்ளனர்.  கடந்த 2021-ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 15.2 லட்சமாக இருந்தது.

இந்தியாவில் சுற்றுலா மூலம் 2021 மற்றும் 2022-ம் ஆண்டில் பெற்ற அந்நியச் செலாவணி வருவாய் (FEE) விவரங்கள் (ரூ. கோடியில்)  கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

ஆண்டு        சுற்றுலா மூலம் பெற்ற அந்நியச் செலாவணி (ரூ. கோடியில்)

2021                  65,070

2022 *                1,34,543

*: தற்காலிக மதிப்பீடுகள்

நாட்டில் சுற்றுலாத்துறைக்கு ஊக்கமளிப்பதற்கும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்கும் சுற்றுலா அமைச்சகம் பல முயற்சிகளை எடுத்துள்ளது.

i) நாட்டின் வளமான பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் உள்நாட்டு சுற்றுலாவை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் ”தேகோ அப்னா தேஷ்” முயற்சி தொடக்கம்.

ii) சிறந்த சேவைத் தரங்களை வழங்குவதற்காக மனிதவளத்தைப் பயிற்றுவிப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் ‘சேவை வழங்குநர்களுக்கான திறன் உருவாக்கம்’ (CBSP) திட்டத்தின் கீழ் நிகழ்ச்சிகளை நடத்துதல்.

iii) 24x7 கட்டணமில்லா பல மொழி சுற்றுலா உதவி எண்.

iv) 166 நாடுகளின் மக்களுக்கு இ-சுற்றுலா விசா, இ-வணிக விசா, இ-மருத்துவ விசா, இ-மருத்துவ உதவி விசா மற்றும் இ-கான்பரன்ஸ் விசா ஆகிய  5 துணை வகைகளுக்கு இ-விசா வசதியை வழங்குதல்

v) எளிமையாக்கப்பட்ட இ-விசா மற்றும் விசா கட்டணம் கணிசமாக குறைப்பு

நாடு முழுவதும் 55 இடங்களில் ஜி-20 மாநாடு நடைபெறுகிறது. இந்த நகரங்களில் உள்ள உட்கட்டமைப்புகள் ஜி-20 கூட்டங்களுக்காக மேம்படுத்தப்பட்டு மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தக் கூட்டங்களுக்கு வரும் பிரதிநிதிகள் அருகிலுள்ள சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் நம் நாட்டின் சுற்றுலாத் தூதுவர்களாக மாறலாம்.  முக்கியமான சுற்றுலாத் தளங்கள் சர்வதேச தரத்திற்கு மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

இது  கலாச்சாரம், சுற்றுலா மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி நேற்று மாநிலங்களவையில் அளித்த பதிலாகும்.

 

----

 

VJ/CR/KPG


(Release ID: 1914668) Visitor Counter : 324


Read this release in: English , Urdu , Marathi