நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இலக்கு நிர்ணயிக்கப்பட்ட பொது விநியோக திட்டத்தின் கீழ், செறிவூட்டப்பட்ட அரிசி 27 மாநிலங்களில் உள்ள 269 மாவட்டங்களில் வழங்கப்படுகிறது

Posted On: 06 APR 2023 3:26PM by PIB Chennai

இலக்கு நிர்ணயிக்கப்பட்ட பொது விநியோகத் திட்டத்தின் கீழ், செறிவூட்டப்பட்ட அரிசி 27 மாநிலங்களில் உள்ள 269 மாவட்டங்களில் வழங்கப்படுவதன் மூலம், செறிவூட்டப்பட்ட அரிசி திட்டத்தின் 2-ம் கட்ட செயலாக்கத்தில் 100 சதவீத இலக்கை அடைந்துள்ளதாக உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலாளர் திரு சஞ்சீவ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

புதுதில்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், 105 லட்சம் மில்லியன் டன் செறிவூட்டப்பட்ட அரிசி 27 மாநிலங்களுக்கு பொது விநியோக முறையில் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. மேலும் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டம் மற்றும் பிரதமரின் ஊட்டச்சத்து திட்டத்தின் கீழ், 134 லட்சம் மில்லியன் டன் செறிவூட்டப்பட்ட அரிசி கொள்முதல் செய்யப்பட்டது.

இன்றைய தேதியில் 18227 அரிசி ஆலைகள் செறிவூட்டப்பட்ட அரிசி வகைக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை பெற்றுள்ளது.  இது கடந்த 21-ம் ஆண்டைக் காட்டிலும் 11 மடங்கு அதிகமாகும்.

ஒட்டுமொத்த வருடாந்திர செறிவூட்டப்பட்ட அரிசியின் விதைப் பயிர் உற்பத்தி கொள்ளளவு 18 மடங்கு அதிகரித்துள்ளது என்று திரு சஞ்சீவ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

 

***

AP/GS/RJ/KPG


(Release ID: 1914418) Visitor Counter : 255


Read this release in: English , Urdu , Hindi , Gujarati