அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

ஒரு லட்சத்து 60,000 - க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடந்த ஓராண்டில் பயோடெக் - கிசான் திட்டத்தில் பயனடைந்துள்ளனர்: டாக்டர் ஜிதேந்திர சிங்

Posted On: 06 APR 2023 1:17PM by PIB Chennai

ஒரு லட்சத்து 60,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடந்த ஓராண்டில் பயோடெக் - கிசான் எனப்படும் உயிரி தொழில்நுட்ப  வேளாண் திட்டத்தில் பயனடைந்திருப்பதாக மத்திய அறிவியல்,  தொழில்நுட்பம் (தனிப்பொறுப்பு), புவி அறிவியல் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்  கூறியுள்ளார்.

மாநிலங்களவையில் இன்று உரையாற்றிய அவர் 2022 ஆம்  ஆண்டு ஜனவரி முதல் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் விவசாயிகள் இந்தத் திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளதாக தெரிவித்தார்.

இது தொடர்பாக மாநிலங்களவையில் அவர் எழுத்துபூர்வமாக அளித்துள்ள பதிலில், பயோடெக்  கிஸான் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கியுள்ளார். நீர்ப்பாசனம், விளைநிலம், விதைகள்,  விளைபொருட்களை விற்பனை செய்வதில் உள்ள சிக்கல்கள் ஆகிய பிரச்சனைகள் குறித்து விவசாயிகளுடன் கலந்தாலோசனை நடத்தி தீர்வு காண்பதற்காகவே இந்தத் திட்டம்  அறிமுகப்படுத்தப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

அதே  நேரத்தில் விதைகளின் தரத்தை மேம்படுத்துதல், காய்கறிகளை தானியக்கிடங்கில் சேகரித்தல், உயிரி - உரம் உதவியுடன் சாகுபடி செய்தல், பாசனம் மற்றும் பாதுகாக்கப்பட்ட சாகுபடி தொழில்நுட்பங்கள்  குறித்தும் விவசாயிகளுக்கு செய்முறை விளக்கமும் அளிக்கப்படுவதாக கூறியுள்ளார்.

மேலும் ஆடு, பன்றி, கோழி வளர்ப்பு மற்றும் மீன் பண்ணைகளை அமைப்பதுடன் அவற்றை ஆரோக்கியமான முறையில் நிர்வகிப்பது குறித்தும் இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுவதாகவும் மத்திய இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தமது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.

***

AD/ES/MA/KPG


(Release ID: 1914227) Visitor Counter : 164


Read this release in: English , Urdu , Marathi , Hindi