வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஸ்டார்ட் அப் இந்தியா தொடங்கப்பட்டதிலிருந்து 92,000-க்கும் அதிகமான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன

Posted On: 05 APR 2023 5:51PM by PIB Chennai

புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும், புத்தாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஸ்டார்ட் அப் மூலம் தனியார் முதலீடுகளை அதிகரிக்கவுமான ஸ்டார்ட் அப் சூழலை உருவாக்கும் நோக்கத்துடன் மத்திய அரசு 2016-ஆம் ஆண்டு ஜனவரி 16-ம் தேதி ஸ்டார்ட் அப் இந்தியா முன்முயற்சியைத் தொடங்கியது.

2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி ஸ்டார்ட் அப் நிறுவனங்களை உள்நாட்டு வர்த்தகம் மற்றும் தொழில் மேம்பாட்டுக்கான துறை, அங்கீகரிக்கும் அறிவிக்கையை வெளியிட்டது. 2016-ஆம் ஆண்டு ஸ்டார்ட் அப் இந்தியா தொடங்கப்பட்டதிலிருந்து  2023 பிப்ரவரி 28-ம் தேதி வரை இந்தத் துறை 92,683 நிறுவனங்களை அங்கீகரித்துள்ளது.

மக்களவையில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் திரு சோம் பிரகாஷ் எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

                                                                                                                                *** 

AP/PKV/KPG



(Release ID: 1914016) Visitor Counter : 208


Read this release in: English , Urdu , Manipuri