உள்துறை அமைச்சகம்

எல்லைத்தாண்டி பயணிகளும், சரக்குகளும் செல்வதற்கு ஏதுவாக சர்வதேச எல்லையில் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடிகள் அமைக்க மத்திய அரசு முடிவு

Posted On: 05 APR 2023 4:04PM by PIB Chennai

எல்லைத்தாண்டி பயணிகளும், சரக்குகளும் செல்வதற்கு ஏதுவாக சர்வதேச எல்லையில் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடிகள் அமைக்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளது தற்போது நம் நாட்டின் சர்வதேச எல்லையில் 9 ஒருங்கிணைந்த சோதனைச் சாவடிகள் பயன்பாட்டில் உள்ளது.

மேலும் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள மோரா, சுதார்கன்டி, அகர்தலா மற்றும் ஸ்ரீமந்தபூர் போன்ற 4 இடங்களில் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடிகள் அமைந்த பிறகு பயணிகளும், வர்த்தக நடவடிக்கைகளும் தங்கு தடையின்றி நடைபெறும். மேலும் இத்தகைய நடவடிக்கைகள் மூலம் சர்வதேச அளவில் வர்த்தக மற்றும் பயணிகள் போக்குவரத்து நடவடிக்கைகள் மேம்பாடு அடையும்.  இதன் விளைவாக நேரமும், செலவினங்களும் வெகுவாக குறைந்து வடகிழக்குப் பகுதியின் வர்த்தகம் மற்றும் போக்குவரத்து நடவடிக்கைகள் உயரும்.

இந்தத் தகவல்களை மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் திரு நிஸித் ப்ரமனிக் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.

 

***

AP/GS/RJ/KPG



(Release ID: 1914011) Visitor Counter : 123


Read this release in: English , Urdu , Manipuri