குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மார்ச் 13-ந் தேதி எழுப்பிய ஒழுங்குப் பிரச்சனை குறித்து மாநிலங்களவைத் தலைவரின் கருத்து

Posted On: 05 APR 2023 3:18PM by PIB Chennai

மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய ஒழுங்குப் பிரச்சனை குறித்து, மாநிலங்களவைத் தலைவர் இன்று தெரிவித்த கருத்து வருமாறு:

வெளிநாட்டில் இந்தியாவின் ஜனநாயகத்தை தாக்கி எதிர்க்கட்சியில் உள்ள ஒரு மூத்த தலைவர் தெரிவித்த கருத்துக்கள் நாடாளுமன்றத்தை அவமதித்து விட்டதாக கூறி அவை முன்னவர் திரு.பியூஷ் கோயல் மன்னிப்புக் கோரிய விஷயம் குறித்து, கடந்த மார்ச் 13-ந் தேதி மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு.மல்லிகார்ஜூன் கார்கே ஒரு ஒழுங்குப் பிரச்சனையை எழுப்பினார்.

அவை முன்னவர் யாரையும் பெயர் குறிப்பிடவில்லை. பெயர் குறிப்பிடப்படாத ஒருவர் வெளிநாட்டில் நமது நாடாளுமன்றத்தை அவமதிக்கும் வகையிலும், இழிவுபடுத்தும் வகையிலும் பேசியதைத்தான் குறிப்பிட்டார்.

நமது ஜனநாயக அரசியலில் மிகவும் உண்மையான பிரதிநிதி பேச வேண்டிய இடம் நாடாளுமன்றத்தை விட புனிதமானதல்ல. இதைக் கருத்தில் கொள்ளும்போது, ​​எல்லா ஜனநாயக நாடுகளையும் விட பெரிதான, ஜனநாயகத்தின் தாயாக விளங்கும் இந்தியா, மனிதகுலத்தின், ஆறில் ஒரு பங்கின் தாயகம் என்பதை நான் அறிவேன். நமது நாடாளுமன்றம் ஜனநாயகத்தின் புனிதமான கருவறையாகும்.

இந்த விஷயம் குறித்து ஆராய்ந்ததில், அவை முன்னவரின் கருத்தில் எந்த அவதூறும் இருப்பதாகக் கருத இடமில்லை. அரசியல் சாசனத்தின் உறுதியான, திட்டவட்டமான விதிகளுக்கு இணங்க இதனை அனுமதிக்க முடியாது என்ற முடிவுக்கு நான் வந்துள்ளேன்.. எனவே எதிர்க்கட்சித் தலைவர் திரு.மல்லிகார்ஜூன் கார்கே எழுப்பிய ஒழுங்குப் பிரச்சனை நிராகரிக்கப்படுகிறது.

                                                                                                                    ***

AP/PKV/RR/KPG


(Release ID: 1913921) Visitor Counter : 178
Read this release in: English , Urdu , Hindi