வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
பிரதமர் மோடியின் தலைமை இந்தியாவை உலகின் 3வது பெரிய ஸ்டார்ட்அப் சூழல் அமைப்பாக மாற்றுகிறது - பியூஷ் கோயல்
Posted On:
02 APR 2023 6:12PM by PIB Chennai
தர்சார்பு இந்தியா பயணம் தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளால் இயக்கப்படுகிறது - கோயல்
கல்வித்துறை, தொழில்துறை மற்றும் முதலீட்டாளர்களின் ஒருங்கிணைப்பிற்காக அரசு செயல்பட்டு வருகிறது. - கோயல்
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் விநியோகம், ஜவுளித் துறை அமைச்சருமான திரு. பியூஷ் கோயல், கடந்த 9 ஆண்டுகளில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை மற்றும் சாமர்த்தியமான தலைமையைப் பாராட்டினார். இது இந்தியாவை உலகின் 3வது பெரிய ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பாக மாற்றியுள்ளது என்றார்.
இன்று நாக்பூரில் உள்ள விஸ்வேஸ்வரய்யா நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியின் (விஎன்ஐடி) வருடாந்திர மின்-உச்சி மாநாடு கூட்டமைப்பு 2023-ன் மதிப்பாய்வு அமர்வில் தனது முக்கிய உரையில், மெய்நிகர் பயன்முறையில், இந்தியா தொழில்நுட்பத்தின் மையமாக உலகம் முழுவதும் மதிக்கப்படுகிறது என்று அமைச்சர் கூறினார். ஒரு தேசமாக, இந்தியா தனது உண்மையான மரியாதையை நாடுகளின் கூட்டுறவில் கண்டறிந்துள்ளது என்றும், புதிய பாரதம் உலகிற்கு நட்புறவையும் கூட்டாண்மையையும் வழங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வளர்ச்சி நிலையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கியதாக இருப்பதை உறுதி செய்யும் அதே வேளையில் உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக மாறும் பாதையில் இந்தியா இடைவிடாமல் பயணிக்கிறது என்றும் திரு. கோயல் கூறினார். அரசின் முயற்சிகள் இந்தியாவின் பொருளாதாரத்தை வெற்றிகரமாக வழிநடத்துவதற்கும் கோவிட் தொற்றுநோயை திறம்பட கையாளுவதற்கும் வளர்ந்து வரும் வல்லரசுக்கான அடித்தளத்தை அமைப்பதற்கும் வழிவகுத்தது என்றும் அவர் குறிப்பிட்டார். முதலீட்டாளர்கள், தொழில்முனைவோர், மூலதன உரிமையாளர்கள் போன்ற பல்வேறு பங்குதாரர்களை ஒரு பொது மன்றத்தில் ஒன்றிணைத்து, பிராந்தியத்தில் ஸ்டார்ட்அப்கள் மற்றும் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்காக உள்ள விஸ்வேஸ்வரய்யா நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியை (VNIT) அமைச்சர் பாராட்டினார்.
உலகளாவிய நிறுவனங்களுக்கு தலைமை தாங்கும் இந்தியர்களால் இந்திய இளைஞர்கள் உலகம் முழுவதும் மிகப்பெரிய திறமைகளையும் திறன்களையும் வெளிப்படுத்தி வருகின்றனர் என்று அமைச்சர் கூறினார். தார்சார்பு இந்தியா பயணம் தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளால் இயக்கப்படுகிறது, இது இளைஞர்களை வேலை தேடுபவர்களை விட வேலைகளை உருவாக்குபவர்களாக மாற்றுகிறது. தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையில் (டிபிஐஐடி) பதிவு செய்யப்பட்ட 90,000 க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒரு மில்லியன் வேலைகளை உருவாக்கியுள்ளன என்றும் அவர் கூறினார்.
மக்களுக்கும் வணிகர்களுக்கும் எளிமையான ஆனால் மிகவும் பயனுள்ள தீர்வுகளை வழங்குவதற்காக ஸ்டார்ட்அப்களை அவர் பாராட்டினார். இது வணிகம் செய்வதை எளிதாக்குகிறது. எளிதாக வாழ்வதை மேம்படுத்துகிறது. ஸ்டார்ட்அப்களில் பாலின சமத்துவம் உள்ளது என்றும் கிட்டத்தட்ட பாதி ஸ்டார்ட்அப்களில் பெண் இயக்குனர்கள் இருப்பதாகவும், பெண் தொழில்முனைவோர் பல வெற்றிகரமான ஸ்டார்ட்அப்களை வழிநடத்தி வருவதாகவும் அவர் கூறினார். ஸ்டார்ட்அப்கள் இந்தியாவை தொழில்நுட்பம் மற்றும் சிந்தனைக்கான தேசமாக மாற்றுகிறது என்று அவர் கருத்து தெரிவித்தார்.
நல்லாட்சி, மின்-ஆளுமை, அரசின் அணுகுமுறை, தேசிய கல்விக் கொள்கை 2020, சூழல் முறையிலான பொருளாதாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பருவநிலை மாற்றம் போன்றவற்றில் அரசின் சாதனைகளை அமைச்சர் எடுத்துரைத்தார். டிஜிட்டல் இணைப்பு நகரங்கள் மற்றும் கிராமங்களில் ஏற்படுத்துவதன் மூலம் உலகெங்கிலும் உள்ள தொழில்நுட்ப மற்றும் நிர்வாக திறமைகளின் தேவைக்கு ஏற்ப இந்திய இளைஞர்கள் வேலை செய்ய முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
2022-23 நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி, சுதந்திரத்தின் 75வது ஆண்டில் 765 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது. உலகச் சூழ்நிலை மிகவும் சவாலானதாக இருக்கும் போதும் சரக்குகள் மற்றும் சேவைகள் இரண்டிலும் நமக்கு வளர்ச்சி உள்ளது. பிப்ரவரி 2023 இல் சரக்கு மற்றும் சேவை வரி வசூல் பொருளாதாரத்தின் அதிக முறைப்படுத்தல் மற்றும் குறிப்பிடத்தக்க வளர்ச்சி வேகத்தின் விளைவாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். சமீபத்தில் வெளியிடப்பட்ட வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை 2023 பல நல்ல அம்சங்களைக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார். தற்சார்பு இந்தியா ஒரு சக்திவாய்ந்த மற்றும் வலுவான தேசமாக உலகத்துடன் சமமாக ஈடுபட தயாராக உள்ளது.
புதுமையான சிந்தனை காலத்தின் தேவை என்றும், விஸ்வேஸ்வரய்யா நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி(VNIT) மாணவர்கள் இந்த புத்தாக்க உணர்வை நாடு முழுவதும் கொண்டு செல்வார்கள் என்றும் அமைச்சர் கூறினார்.
**********
AD/CJL/DL
(Release ID: 1913120)
Visitor Counter : 223