சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

காந்தி நகரில் நடைபெறும் ஜி20 ன் இரண்டாவது சுற்றுச்சூழல் பருவநிலை நிலைத்தன்மை பணிக்குழு கூட்டத்தில் நீர்வளம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது

प्रविष्टि तिथि: 28 MAR 2023 4:56PM by PIB Chennai

ஜி20 அமைப்பின் இரண்டாவது சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை நிலைத்தன்மை பணிக்குழு கூட்டம் இரண்டாவது நாளாக காந்திநகரில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திருமதி ரிச்சா சர்மா, பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள ஜி20 நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்று கூறினார்.

     தொடக்க அமர்வை தொடர்ந்து முதலாவது தொழில்நுட்ப அமர்வு நடைபெற்றது. இதில் நீர்வள மேலாண்மை குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் சுழற்சி பொருளாதாரம் தொடர்பாக இரண்டாவது அமர்வு நடைபெற்றது. ஜி20 உறுப்பு நாடுகள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற நாடுகளின் பிரதிநிதிகள் ஒவ்வொரு துணை கருப்பொருள்கள் குறித்தும் விரிவாக தங்களது கருத்துக்களை எடுத்துரைத்தனர். இந்தியாவின் திறன் வாய்ந்த செயல்பாடுகளுக்கு அவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

AD/PLM/MA/KRS

***


(रिलीज़ आईडी: 1911569) आगंतुक पटल : 151
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati , Telugu