உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்
உள்ளூர் உணவுப் பதப்படுத்துதல் துறைக்கு ஆதரவு
Posted On:
28 MAR 2023 1:06PM by PIB Chennai
தற்சார்பு இந்தியா இயக்கத்தின் ஒரு பகுதியாக உணவுப் பதப்படுத்துதல் துறையில் உள்ளூர் தொழில்களை ஆதரிக்கும் திட்டத்தை மத்திய உணவுப்பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. பிரதமரின் குறு நிறுவனங்களின் உணவுப்பதப்படுத்துதல் தொழில்களை இயல்பாக்கும் திட்டத்தின் கீழ் நிதியுதவி, தொழில்நுட்ப உதவி, வணிக ஆதரவு ஆகியவை வழங்கப்படுகின்றன. நாட்டில் குறு நிறுவனங்களின் உணவுப்பதப்படுத்துதல் தொழில் மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும். 2020-21 முதல் 2024-25 வரையிலான ஐந்தாண்டு காலத்திற்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீட்டுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இதுவரை மொத்தம் 27,003 கடனுதவி, கடனுடன் கூடிய மானியத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளன.
தமிழை்நாட்டில் 3,552 கடனுதவிகளும், புதுச்சேரியில் 47 கடனுதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.
மக்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய உணவுப்பதப்படுத்துதல் துறை இணையமைச்சர் திரு.பிரகலாத் சிங் பட்டேல் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.
***
(Release ID: 1911372)
AD/PKV/RR/KRS
(Release ID: 1911444)
Visitor Counter : 226