பாதுகாப்பு அமைச்சகம்

வரும் 28ந்தேதி ஐஎன்எஸ் சில்காவில் அக்னி வீரர்களின் முதல் தொகுதி பயிற்சி நிறைவு அணிவகுப்பு

Posted On: 25 MAR 2023 5:37PM by PIB Chennai

முதல் தொகுதி அக்னிவீரர்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு வரும்  28ந்தேதி ஐஎன்எஸ்  சில்காவில் நடைபெறுகிறது.  273 பெண்கள் உட்பட 2,600 அக்னிவீரர்கள் பயிற்சியை வெற்றிகரமாக முடித்ததை இது குறிக்கிறது. கடற்படை தளபதி அட்மிரல் ஆர் ஹரி குமார்தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறார். மூத்த கடற்படை அதிகாரிகள் மற்றும் உயரதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்துகொள்வார்கள். வெற்றிகரமான பயிற்சியாளர்கள் தங்கள் கடல் பயிற்சிக்காக போர்க்கப்பல்களில் சேர்க்கப்படுவார்கள்.

2022 ஜூன் 14 அன்று, பாதுகாப்பு துறை அமைச்சர்  மற்றும் முப்படை தளபதிகள்  அக்னிபத் திட்டத்தைத் தொடங்கினர். தகுதி அடிப்படையிலான அக்னிபத் ஆட்சேர்ப்புத் திட்டத்தின்  முன்முயற்சிக்கு இணங்க, இந்தியக் கடற்படை அதன் தேர்வு, பயிற்சி மற்றும் வரிசைப்படுத்தல் முறையைக் கையாண்டு வீரர்களைத் தேர்வு செய்தது.  இதன் விளைவாக, 273 பெண் அக்னி வீராங்கனைகள் உட்பட சுமார் 2,600 அக்னிவீரர்கள் இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டனர். அவர்கள் நவம்பர் மாதம் ஐஎன்எஸ் சில்காவில் தங்கள் பயிற்சியைத் தொடங்கினர்.

பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பிறகு, அக்னிவீரர்கள் வெளியேறுவது இதுவே நாட்டில் முதன்முறையாகும். இது அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் பெருமை சேர்க்கும் தருணமாக அமையும்.  அணிவகுப்பு நிகழ்ச்சியில், தகுதியான அக்னிவீரர்களுக்கு பல்வேறு பிரிவுகளில் தலைமை விருந்தினரால் விருதுகள் வழங்கப்படும். இந்த ஆண்டு முதல், மறைந்த ஜெனரல் பிபின் ராவத் பெயரில், நிறுவப்பட்டுள்ள பிபின் ராவத் ரோலிங் டிராபி 'ஒட்டுமொத்த தகுதி வரிசையில் முதலிடம் வகிக்கும் பயிற்சி பெண் அக்னிவீராங்கனைக்கு வழங்கப்படும்.  இந்தக் கோப்பையை தகுதியான பெண் அக்னிவீராங்கனைக்கு மறைந்த ஜெனரல் ராவத்தின் மகள்கள் வழங்குவார்கள்.

***

AD/PKV/DL



(Release ID: 1910801) Visitor Counter : 109


Read this release in: English , Urdu , Marathi , Hindi