சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நெடுஞ்சாலை பொறியியல் துறையில் நவீன தொழில்நுட்பங்களையும், புதுமையான சிந்தனைகளையும் பகிர்ந்து கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் என்எச்ஐடிசிஎல், சென்னை சிஎஸ்ஐஆர்-எஸ்இஆர்சி கையெழுத்து

प्रविष्टि तिथि: 24 MAR 2023 4:01PM by PIB Chennai

நெடுஞ்சாலை பொறியியல் துறையில் நவீன தொழில்நுட்பங்களையும், புதுமையான சிந்தனைகளையும் பகிர்ந்து கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தேசிய நெடுஞ்சாலை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் (என்எச்ஐடிசிஎல்), சென்னை அறிவியல் மற்றும் தொழிலியல் ஆராய்ச்சிக் கவுன்சிலின் கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம் (சிஎஸ்ஐஆர்-எஸ்இஆர்சி) ஆகியவை இன்று கையெழுத்திட்டுள்ளன. என்எச்ஐடிசிஎல்-ன் மேலாண்மை இயக்குனர் திரு.சஞ்சால்குமார், சிஎஸ்ஐஆர் இயக்குனர் டாக்டர் என்.ஆனந்தவள்ளி ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்த இரு நிறுவனங்களும் நெடுஞ்சாலை பொறியியல் மற்றும் இதர உள்கட்டமைப்புப் பணிகளில் பரஸ்பரம் ஒப்புக் கொள்ளப்பட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் நவீன தொழில்நுட்பங்களை பகிர்ந்து கொள்வது போன்ற பரஸ்பர நலன் சார்ந்த பல்வேறு நடவடிக்கைகளை கூட்டு முயற்சியில் மேற்கொள்ள இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் வகை செய்யும். இந்த ஒத்துழைப்பு சாலைத் துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதுடன், நெடுஞ்சாலை உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் பயிற்சிகளை நடத்தவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய என்எச்ஐடிசிஎல் மேலாண்மை இயக்குனர் திரு.சஞ்சால்குமார், தரமான ஆராய்ச்சி மேம்பாட்டின் மூலம் கூட்டாண்மை திட்டங்களுக்கு அரசு ஆதரவளிப்பதாக தெரிவித்தார். இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் புதிய வாய்ப்புகளுக்கும் வழிவகுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

*****

SM/PKV/RR/KRS


(रिलीज़ आईडी: 1910455) आगंतुक पटल : 251
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Telugu