பாதுகாப்பு அமைச்சகம்

ரூ.3,000 கோடி மதிப்பிலான, 2 ஒருங்கிணைந்த மின்னணு போர் ஆயுத அமைப்பு தளவாடங்களை வாங்க பிஇஎல் நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம்

Posted On: 24 MAR 2023 3:57PM by PIB Chennai

சுமார் ரூ.3,000 கோடி மதிப்பிலான ஹிம்சக்தி திட்டம் என்னும் இரண்டு ஒருங்கிணைந்த மின்னணு போர் அமைப்பு தளவாடங்களை, ஐதராபாத் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திடமிருந்து வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகம் இன்று கையெழுத்திட்டுள்ளது. உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்டு உற்பத்தி செய்யப்படும் திட்டத்தின் கீழ் இந்தக் கொள்முதல் மேற்கொள்ளப்படுகிறது.

ஹிம்சக்தி திட்டம், பிஇஎல் நிறுவனத்தின் துணை விற்பனை நிலையங்களாக செயல்படும், இந்திய மின்னணுவியல், எம்எஸ்எம்இ-க்கள் உள்ளிட்ட தொழில்களை ஊக்குவிக்கும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 3 லட்சம் மனித நாட்கள் வேலைவாய்ப்பை இது உருவாக்கும். அரசின் மேக் இன் இந்தியா முன்முயற்சியுடன் நாட்டை தற்சார்பு கொண்டதாக மாற்றும் வகையில் உள்நாட்டுத் திறன்களை உருவாக்குவதில் இத்திட்டம் முக்கியப் பங்கு வகிக்கும்.

****



(Release ID: 1910337)

SM/PKV/RR/KRS



(Release ID: 1910434) Visitor Counter : 147


Read this release in: English , Urdu , Marathi , Hindi , Odia