சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சிறுபான்மையின மாணவர்களுக்கு இலவச பயிற்சித் திட்டம்

Posted On: 23 MAR 2023 5:24PM by PIB Chennai

சீக்கியம், ஜெயின், இஸ்லாம், கிறித்தவம், பௌத்தம் மற்றும் பார்சி ஆகிய அறிவிக்கப்பட்ட ஆறு சிறுபான்மையின சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள்/ விண்ணப்பதாரர்களுக்கு உதவும் வகையில் புதிய விடியல் (நயா சவேரா) என்ற விலையில்லா பயிற்சித் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது. இந்தத் திட்டம் பற்றி நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் சிறுபான்மையின விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி ஜூபின் இரானி கூறியதாவது: இத்திட்டம் தொடங்கப்பட்டது முதல் சுமார் 1.19 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர், இவர்களுள் 12,155 பேர் ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்.

தொழில்நுட்பக் கல்வி, தொழில் கல்விக்கான படிப்புகளில் சேர்வதற்குத் தகுதி பெறவும், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள், ரயில்வே உட்பட மத்திய மற்றும் மாநில அரசுகளின் கீழ் இயங்கும் நிறுவனங்களில் குரூப் ‘ஏ’, ‘பி’ மற்றும் 'சி’ பணியிடங்களுக்கான போட்டித் தேர்வை எதிர்கொள்வதற்கும் இலவச பயிற்சித் திட்டத்தின் கீழ், அறிவிக்கப்பட்ட சிறுபான்மையின சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள்/ விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. திட்டங்களை அமல்படுத்தும் முகமைகள் (பி.ஐ.ஏ) மூலம் இப்பயிற்சிகள் நாடு முழுவதும் அளிக்கப்பட்டன.

இத்திட்டத்தின் கீழ் பயனுடைந்துள்ள சிறுபான்மையின மாணவர்களின் மாநில அளவிலான விவரங்களை  http://www.minorityaffairs.gov.in/ என்ற அமைச்சகத்தின் இணையதளத்தில் காணலாம். பயிற்சித் திட்டத்தை அமல்படுத்தும் முகமையைப் பொறுத்து பயிற்சி காலம் 3 மாதங்கள் முதல் இரண்டு ஆண்டு வரை நீடித்தது. 2022-23 முதல் இத்திட்டம் கைவிடப்பட்டது.

***

 

 (Release ID: 1910012)

SM/RB/KRS




(Release ID: 1910325) Visitor Counter : 117


Read this release in: English , Urdu