சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
கல்வி உதவித் தொகை திட்டங்களின் கீழ் இலக்குகள் மற்றும் சாதனைகள்
Posted On:
23 MAR 2023 5:38PM by PIB Chennai
சிறுபான்மையினர், பொருளாதார ரீதியில் பின்தங்கியோர், சமூகத்தில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய பிரிவினர் உள்ளிட்டோரின் மேம்பாட்டுக்காக திறன் மேம்பாட்டு அமைச்சகம், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், ஜவுளி அமைச்சகம், கலாச்சார அமைச்சகம், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், ஊரக வளர்ச்சி அமைச்சகம் உள்ளிட்ட அமைச்சகங்கள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகின்றன.
சிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சகம், அறிவிக்கப்பட்ட சிறுபான்மையின சமூகத்தினரின் கல்வி மேம்பாட்டுக்காக பல்வேறு உதவித் தொகை மற்றும் ஃபெலோஷிப் திட்டங்களை செயல்படுத்துகிறது.
10-ம் வகுப்புக்கு முந்தைய, 10-ம் வகுப்புக்கு பிந்தைய, தகுதி மற்றும் வழிமுறைகள் அடிப்படையிலான உதவித் தொகை திட்டங்களும் சிறுபான்மையினர் பயனடையும் வகையில் செயல்படுத்தப்படுகின்றன. 2019-20-ம் நிதியாண்டில் 10-ம் வகுப்புக்கு முந்தைய உதவித் தொகை திட்டத்தின் கீழ் புதிய மாணவர்கள் மற்றும் ஏற்கனவே பலன் பெற்று புதுப்பித்த மாணவர்கள் என மொத்தம் 55 லட்சத்து 68 ஆயிரம் பேர் பலனடைந்துள்ளனர். 2020-21-ம் நூற்றாண்டில் 52 லட்சத்து 40 பேரும், 2021-22-ம் ஆண்டில் 57 லட்சத்து 43 ஆயிரம் பேரும் பயனடைந்துள்ளனர்.
10-ம் வகுப்பு பிந்தைய உதவித் தொகை திட்டத்தின் கீழ் 2019-20-ம் நிதியாண்டில் 7 லட்சத்து 43 ஆயிரம் பேரும், 2020-21-ம் நிதியாண்டில் 6 லட்சத்து 63 ஆயிரம் பேரும், 2021-22-ம் நிதியாண்டில் 7 லட்சத்து 21 ஆயிரம் பேரும் பயனடைந்துள்ளனர்.
தகுதி மற்றும் வழிமுறைகள் அடிப்படையிலான உதவித் தொகை திட்டங்களின் கீழ் 2019-20-ம் நிதியாண்டில் 1 லட்சத்து 18 ஆயிரம் பேரும், 2020-21-ம் நிதியாண்டில் 1 லட்சத்து 20 ஆயிரம் பேரும், 2021-22-ம் நிதியாண்டில் 1 லட்சத்து 32 ஆயிரம் பேரும் பலனடைந்துள்ளனர்.
இந்த தகவலை மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி ஜூபின் இரானி தெரிவித்துள்ளார்.
*******
AD/PLM/AG/KRS
(Release ID: 1910289)
Visitor Counter : 136