ஜல்சக்தி அமைச்சகம்
ஊரகப்பகுதிகளில் 11.49 கோடி வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது
प्रविष्टि तिथि:
23 MAR 2023 6:15PM by PIB Chennai
2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஜல்ஜீவன் இயக்கத்தை மத்திய அரசு தொடங்கியது. அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் தூய்மையான குடிநீர் வழங்கும் நோக்கத்தில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. 2019 ஆகஸ்ட் மாதத்தில் நாடு முழுவதும் மொத்தம் 3 கோடியே 23 லட்சம் வீடுகளில் மட்டுமே குடிநீர் குழாய் இணைப்பு இருந்தது. மாநில அரசுகளுடன் இணைந்து ஜல்ஜீவன் இயக்கம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டதையடுத்து கடந்த மூன்றரை ஆண்டுகளில் கூடுதலாக 8 கோடியே 26 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து நாட்டில் உள்ள 19.43 கோடி கிராமப்புற வீடுகளில் இதுவரை 11.49 கோடி கிராமப்புற வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 2019 ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் உள்ள 1 கோடியே 25 லட்சம் கிராமப்புற வீடுகளில் 21 லட்சத்து 76 ஆயிரம் வீடுகளில் மட்டுமே குடிநீர் குழாய் இணைப்பு இருந்தது. தற்போது 56 லட்சத்து 83 ஆயிரம் கிராமப்புற வீடுகளில் குழநீர் குழாய் இணைப்பு உள்ளது. கோவா, குஜராத், ஹரியானா, பஞ்சாப், தெலங்கானா ஆகிய மாநிலங்கள் மற்றும் அந்தமான் நிகோபார், புதுச்சேரி, தாத்ரா நகர் ஹவேலி, டாமன் டையூ யூனியன் பிரதேசங்களில் 100 சதவீத குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மத்திய ஜல்சக்தித்துறை இணையமைச்சர் திரு பிரஹலாத் சிங் பட்டேல் தெரிவித்துள்ளார்.
***
SM/PLM/AG/KRS
(रिलीज़ आईडी: 1910142)
आगंतुक पटल : 167