ரெயில்வே அமைச்சகம்

2022-23-ம் நிதியாண்டில் விகல்ப் திட்டத்தின் கீழ் ரயில்வே காத்திருப்போர் பட்டியலில் இருந்த 43,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு தங்குமிட வசதி

Posted On: 23 MAR 2023 5:43PM by PIB Chennai

2022-23-ம் நிதியாண்டில் பிப்ரவரி மாதம் வரை விகல்ப் திட்டத்தின் கீழ் ரயில்வே காத்திருப்போர் பட்டியலில் இருந்த 43,803 பேருக்கு தங்குமிட வசதி செய்து தரப்பட்டுள்ளது.

ரயில் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் முன்பதிவு ரயில்களுக்கான பெட்டிகளில் காத்திருப்போர் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.

அவ்வாறு காத்திருப்போர் பட்டியலில் இடம்பெற்றிருப்பவர்களுக்கு கடைசி நேரத்தில் படுக்கை வசதி கிடைக்காத பட்சத்தில் அவர்களின் நலன் கருதி, காத்திருப்போர் பட்டியலில் இடம்பெற்றிருப்போருக்கான தங்குமிட வசதி வழங்கும் விகல்ப் என்னும் திட்டத்தை இந்தியன் ரயில்வே 2016-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.

ரயிலில் முன்பதிவு செய்யும்போதே, பயணிகள் விகல்ப் திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும். இதற்காக எவ்வித கூடுதல் கட்டணமும் பயணிகளிடமிருந்து வசூலிக்கப்பட மாட்டாது.

இந்தத் திட்டத்தை பயணிகள் தேர்வு செய்யும்பட்சத்தில், அவர்கள் பெயர் காத்திருப்போர் பட்டியலில் இருந்தால், பயணிகள் 72 மணி நேரம் தங்குவதற்கு இட வசதி செய்து தரப்படும்.

***

SM/ES/RS/KRS

 



(Release ID: 1910134) Visitor Counter : 95


Read this release in: English , Urdu