தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
2021-22 நிதியாண்டில் இருந்து 5 ஆண்டுகளில் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகைத் திட்டத்தின் கீழ் 60 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்க இலக்கு
Posted On:
23 MAR 2023 5:41PM by PIB Chennai
2021-22 நிதியாண்டில் இருந்து 5 ஆண்டுகளில் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகைத் திட்டத்தின் கீழ் 2021-22 முதலான 5 ஆண்டுகளில் 60 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மத்திய புள்ளியில் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகம் ஆய்வு நடத்தி, நாட்டின் வேலைவாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்பின்மை குறித்த தரவுகளை சேகரித்துள்ளது. குறிப்பாக, 2017-18-ம் நிதியாண்டு முதல் 2021-22-ம் நிதியாண்டு வரை 15 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான வேலைவாய்ப்பின்மை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, 2017-18-ம் நிதியாண்டில் 6 சதவீதமாக இருந்த வேலைவாய்ப்பின்மை 2021-22-ம் நிதியாண்டில் 4.1 சதவீதமாகக் குறைந்துள்ளது.
மாநில வாரியான வேலைவாய்ப்பின்மை சதவீதம் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டில் 2017-18-ம் நிதியாண்டில் 7.5 சதவீதமாக இருந்த வேலைவாய்ப்பின்மை 2021-22-ம் நிதியாண்டில் 4.8 சதவீதமாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.
இதேபோல் புதுச்சேரியில் 2017-18-ம் நிதியாண்டில் 10.3 சதவீதமாக இருந்த வேலைவாய்ப்பின்மை 2021-22-ம் நிதியாண்டில் 5.8 சதவீதமாகக் குறைந்துள்ளது.
கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்ட வேலைவாய்ப்பின்மையைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காக ஆத்ம நிர்பார் பாரத் ரோஸ்கார் திட்டத்தை கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தின் கீழ் 2023 மார்ச் 11-ம் தேதி வரை 60.3 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதேபோல், பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ், குறு மற்றும் சிறு நிறுவனங்கள் தங்களுடைய தொழிலை விஸ்தரிக்க ஏதுவாக உத்தரவாதம் அளிக்காமல் ரூ. 10 லட்சம் வரை கடன் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் 2023 பிப்ரவரி 24-ம் தேதி வரை 39.65 கோடிக்கும் மேற்பட்ட கடன்கள் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகைத் திட்டம் 2021-22 நிதியாண்டில் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்திற்கு 5 ஆண்டுகளுக்கு ரூ.1.97 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்படி 60 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
***
SM/ES/RS/KRS
(Release ID: 1910133)
Visitor Counter : 216