தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

கொத்தடிமைத் தொழிலாளர் முறையை ஒழிக்க அரசு பல்முனை உத்திகளை கையாண்டு வருகிறது

Posted On: 23 MAR 2023 4:56PM by PIB Chennai

கொத்தடிமைத் தொழிலாளர் முறையை ஒழிக்க அரசு பல்முனை உத்திகளை கையாண்டு வருகிறது. கொத்தடிமைத் தொழிலாளர் முறையை அகற்றுவதற்கு மத்திய அரசு 1976-ம் ஆண்டு சட்டம் இயற்றியுள்ளது. கொத்தடிமை தொழிலாளர் மறுவாழ்வுக்கான திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்துகிறது. இத்திட்டத்தின் கீழ் மீட்கப்படும் ஒவ்வொரு கொத்தடிமை தொழிலாளர்களுக்கும் ரூ.30,000 நிதியுதவி வழங்கப்படுகிறது.  அத்துடன் வீடு மற்றும் விவசாய நில ஒதுக்கீடு, கால்நடை மற்றும் பால் உற்பத்தி தொடர்பான தொழில்கள் பயிற்சி, குழந்தைகளுக்கு கல்வி உதவி உள்ளிட்ட பல உதவிகளும் வழங்கப்படுகின்றன.

மத்திய அரசின் இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 2021-22 ஆம் ஆண்டில் மொத்தம் 1016 கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்கப்பட்டு அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது. 2022-23-ம் ஆண்டில் பிப்ரவரி மாதம் வரை தமிழ்நாட்டில் 297 பேர் மீட்கப்பட்டு, அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மத்திய தொழிலாளர் நலத்துறை இணையமைச்சர் திரு ராமேஸ்வர் தெலி கூறியுள்ளார்.

***

SM/PLM/AG/KRS



(Release ID: 1910095) Visitor Counter : 212


Read this release in: English , Urdu , Telugu