புவி அறிவியல் அமைச்சகம்
இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஆழ்கடலில் உள்ள உயிரினங்கள் மற்றும் உயிரற்ற வளங்கள் குறித்து சிறந்த புரிதலை ஏற்படுத்தி நீலப் பொருளாதாரத்திற்கு உதவும் வகையில் ஆழ்கடல் இயக்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது: மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்
இடுகை இடப்பட்ட நாள்:
23 MAR 2023 3:14PM by PIB Chennai
இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஆழ்கடலில் உள்ள உயிரினங்கள் மற்றும் உயிரற்ற வளங்கள் குறித்து சிறந்த புரிதலை ஏற்படுத்தி நீலப் பொருளாதாரத்திற்கு உதவும் வகையில் ஆழ்கடல் இயக்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆழ்கடல் தாது வளங்கள், கடல்சார் பல்லுயிர் பெருக்கம், ஆழ்கடல் உயிரியலில் திறன் கட்டமைப்பு உள்ளிட்டவை குறித்து தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஆய்வுப்பணிகளை மேற்கொள்ள பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு துறைகள் இணைந்து ஆழ்கடல் இயக்கத்தை செயல்படுத்துகின்றன. மனிதர்களுடன் கூடிய ஆழ்கடல் நீர்மூழ்கி வாகனத்தில் 6000 கி.மீ. ஆழத்தில் ஆய்வுப்பணிகள் மேற்கோள்ளப்படவுள்ளன.
3 நபர்களுடன் ஆழ்கடலுக்கு செல்லக்கூடிய நீர்மூழ்கி இயந்திரங்களை வடிவமைத்து மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதன் வடிவமைப்பு தயாராக உள்ள நிலையில், இதற்கான ஒத்திகை 2024-26 ஆம் ஆண்டு கால கட்டத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் உயிரற்ற வளங்களான தாதுப் பொருட்கள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யும் நோக்கில் இந்த இயக்கம் பயன்படும். இந்திய கடலோர பகுதிகளின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கும் உதவும்.
இந்த தகவலை மத்திய புவி அறிவியல் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
***
SM/PLM/AG/KRS
(வெளியீட்டு அடையாள எண்: 1909999)
வருகையாளர் எண்ணிக்கை : 174