சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்

சிறுபான்மையின மாணவர்களுக்கான 10-ம் வகுப்புக்கு முந்தைய மற்றும் 10-ம் வகுப்பு பிந்தைய கல்வி உதவித் தொகை திட்டம் மற்றும் மௌலானா ஆசாத் தேசிய ஃபெலோஷிப் திட்டம்

Posted On: 23 MAR 2023 2:31PM by PIB Chennai

சிறுபான்மையினர், பொருளாதார ரீதியில் பின்தங்கியோர், சமூகத்தில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய பிரிவினர் உள்ளிட்டோரின் மேம்பாட்டுக்காக திறன் மேம்பாட்டு அமைச்சகம், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், ஜவுளி அமைச்சகம், கலாச்சார அமைச்சகம், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், ஊரக வளர்ச்சி அமைச்சகம் உள்ளிட்ட அமைச்சகங்கள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகின்றன.  சிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சகம், அறிவிக்கப்பட்ட சிறுபான்மையின சமூகத்தினரின் கல்வி  மேம்பாட்டுக்காக பல்வேறு  உதவித் தொகை மற்றும் ஃபெலோஷிப் திட்டங்களை செயல்படுத்துகிறது.

சிறுபான்மையின மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக 10-ம் வகுப்புக்கு முந்தைய மற்றும் 10-ம் வகுப்புக்கு பிந்தைய கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் 6 அறிவிக்கப்பட்ட சிறுபான்மையின சமூகத்தினருக்கு 2017-18 நிதியாண்டில் இருந்து 2021-22-ம் ஆண்டு வரை வழங்கப்பட்ட உதவித் தொகை தொடர்பான விவரங்கள், சிறுபான்மையினர் விவகாரங்கள்  அமைச்சகத்தின் இணையதளத்தில் இடம் பெற்றுள்ளன.

யூஜிசி மற்றும் சிஎஸ்ஐஆர்-ன் இளநிலை ஆராய்ச்சி ஃபெலோஷிப் (ஜேஆர்எஃப்) திட்டம் அனைத்துப் பிரிவு மாணவர்களுக்கும் பயனளிக்கிறது. இதுதவிர, சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் எஸ்சி மற்றும் ஓபிசி பிரிவினருக்கான  தேசிய ஃபெலோஷிப் திட்டத்தின் கீழ் சிறுபான்மையின மாணவர்களும் பயன்பெற முடியும். பழங்குடியின மாணவர்களுக்காக பழங்குடியின விவகாரங்கள் அமைச்சகம் செயல்படுத்தும் தேசிய ஃபெலோஷிப் திட்டமும் சிறுபான்மையினரை உள்ளடக்கிய வகையில் உள்ளது. சிறுபான்மையின மாணவர்களின் உயர்கல்விக்காக பல்வேறு ஃபெலோஷிப் திட்டங்கள்  உள்ளதாலும் அவை ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதாக அமைந்திருப்பதாலும், மெளலானா ஆசாத் தேசிய ஃபெலோஷிப் திட்டத்தை 2022-23-ம் நிதியாண்டில் இருந்து  கைவிட அரசு முடிவு செய்தது.

இந்த தகவலை மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி ஜூபின் இரானி தெரிவித்துள்ளார்.

***

SM/PLM/AG/KRS



(Release ID: 1909996) Visitor Counter : 109


Read this release in: Telugu , English , Urdu