சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நமது பாரம்பரிய திட்டம்

प्रविष्टि तिथि: 23 MAR 2023 2:28PM by PIB Chennai

நமது பாரம்பரியம் என்ற திட்டம் இந்தியாவில் உள்ள சிறுபான்மையின சமூகங்களின் வளமான பாரம்பரியத்தை பாதுகாக்க உருவாக்கப்பட்டது. தற்போது இந்த திட்டம் பிரதமரின் பாரம்பரிய ஊக்குவிப்பு திட்டத்துடன் (பிஎம் விகாஸ்) இணைக்கப்பட்டு அதன் ஒரு பகுதியாக செயல்படுத்தப்படுகிறது. 2022-23-ம் ஆண்டு முதல் இது நடைமுறைக்கு வந்துள்ளது. சிறுபான்மையினரின் வாழ்வாதாரத்தை குறிப்பாக, கலைத்திறன் கொண்ட சிறுபான்மையினரின் வாழ்வாதாரத்தை, திறன்மேம்பாடு, கல்வி மற்றும் தலைமைப்பண்பு பயிற்சிகளின் மூலம் மேம்படுத்தி அவர்களது தொழில்முனைவு திறன்களை வளர்ப்பதை மையமாக கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்த தகவலை மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி ஜூபின் இரானி தெரிவித்துள்ளார்.

***

SM/PLM/AG/KRS


(रिलीज़ आईडी: 1909950) आगंतुक पटल : 191
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Marathi , English , Urdu