சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
இந்தியாவில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவது தொடர்பான 2 நாள் தொழில்நுட்பக் கருத்தரங்கிற்கு மத்திய சுகாதார அமைச்சகம் ஏற்பாடு
प्रविष्टि तिथि:
22 MAR 2023 2:53PM by PIB Chennai
இந்தியாவில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவது தொடர்பான 2 நாள் தொழில்நுட்பக் கருத்தரங்கம் மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் புதுதில்லியில் இன்று தொடங்கியது. இதனை அத்துறை செயலாளர் திரு ராஜேஷ் பூஷன் தொடங்கிவைத்து பேசினார். அப்போது குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் டெங்கு காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்துவது அவசியம் என்றும், மத்திய அரசின் தீவிரமான நடவடிக்கைகளால் டெங்கு பரவல் கட்டுக்குள் இருப்பதாகவும் குறிப்பிட்டார். இந்தக் கருத்தரங்கில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திரு ரோலி சிங், உலக சுகாதார அமைப்பின் அவசரகால ஆரோக்கியக் குழுவின் தலைவர் டாக்டர் ட்ரன் மின் மற்றும் எய்ம்ஸ் உள்ளிட்ட பல்வேறு மருத்துவக்கல்லூரியைச் சேர்ந்த மருத்துவ மாணவர்களும் கலந்துகொண்டனர்.



***
SM/ES/RS/KRS
(रिलीज़ आईडी: 1909694)
आगंतुक पटल : 166