கனரகத் தொழில்கள் அமைச்சகம்

2020- ம் ஆண்டு முதல் 2023 மார்ச் 15 ம் தேதி வரை இந்தியாவில் 2,56,980 மின்சார வாகனங்கள் பதிவு

Posted On: 21 MAR 2023 2:58PM by PIB Chennai

2020- ம் ஆண்டு முதல் 2023 மார்ச் 15 ம் தேதி வரை இந்தியாவில் 2,56,980 மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2020-ம் ஆண்டு மொத்தம் 1,23,092 வாகனங்களும், 2021-ம் ஆண்டு 3, 27, 976 மின்சார வாகனங்களும், 2022-ம் ஆண்டு  10,15,196 மின்சார வாகனங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், மத்திய கனரக தொழில் துறை சார்பில் மின்சார வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோருக்கு 3 திட்டங்களின் கீழ்  ஊக்கத்தொகை உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறன.

மக்களவையில் இன்று எழுப்பப்பட்ட கேள்விக்கு கனரக தொழில் துறை இணையமைச்சர் திரு கிரிஷன் பால் குர்ஜால்  எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதனை தெரிவித்துள்ளார்.

 

***

SM/ES/RS/KRS(Release ID: 1909127) Visitor Counter : 139


Read this release in: English , Marathi , Urdu , Telugu