பாதுகாப்பு அமைச்சகம்

காட்டுப்பள்ளியில் பல்நோக்கு கப்பல் திட்டத்தின் கீழ் எல்&டி நிறுவனத்தின் மூலம் இரண்டு கப்பல் கட்டும் தளங்கள் அமைக்கும் பணி தொடக்கம்

Posted On: 20 MAR 2023 5:37PM by PIB Chennai

காட்டுப்பள்ளியில் பல்நோக்கு கப்பல் திட்டத்தின் கீழ் எல்&டி நிறுவனத்தின் மூலம் இரண்டு கப்பல் கட்டும் தளங்கள் அமைக்கும் பணி இன்று (20.03.2023)  தொடங்கப்பட்டது.

இந்த தொடக்க விழாவிற்கு எல்&டி நிறுவனத்தின் மூத்த அதிகாரியான திரு சந்தீப் நைதானி தலைமை வகித்தார்.  இந் நிறுவனத்தின் மற்ற  அதிகாரிகளான  திரு கிரண் தேஷ்முக், திரு அசோக் கேதன், இந்திய கடற்படை மற்றும் எல்&டியின் மூத்த அதிகாரிகள் முன்னிலையில் இந்த விழா நடைபெற்றது.

 மத்திய அரசின் ‘தற்சார்பு இந்தியா மற்றும் மேக் இன் இந்தியா’ திட்டங்களுக்கு  இணங்க, 2 பல்நோக்கு கப்பல் கட்டும் தளம் அமைக்கும் பணிக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. காட்டுப்பள்ளியில் உள்ள எல்&டி நிறுவனத்தின் மூலம்  உருவாக்கப்படும் முதல் இந்திய கடற்படை போர்க்கப்பல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பல்நோக்கு கப்பல்களுக்கான அனைத்து முக்கிய இயந்திரங்கள், துணை உபகரணங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய செயல்பாடுகள் உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து பெறப்படும். இதன்மூலம் பாதுகாப்பு உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்குவதில் கூடுதல்  உத்வேகத்தை அளிக்கும். இந்தக் கப்பல்கள், இந்தியக் கடற்படைக்கு வழங்கப்பட்டவுடன், கடல்சார் கண்காணிப்பு, ரோந்துப் பணி, பேரிடர் நிவாரணம் மற்றும் பல்வேறு பயிற்சிகளுக்காக பயன்படுத்தப்படும். மேலும் தன்னிச்சையாக, தொலைதூரத்தில், ஆளில்லா கப்பல்களை இயக்க  வழிவகை செய்யப்படும்.

***

SM/GS/RS/KRS



(Release ID: 1908926) Visitor Counter : 145


Read this release in: English , Urdu , Hindi