சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

உலகளாவிய சிறுதானிய 2- நாள் மாநாட்டின் ஒரு பகுதியாக இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரச்சான்று ஆணையம் தொழில்நுட்ப அமர்வுகளை நடத்தியது

Posted On: 20 MAR 2023 5:32PM by PIB Chennai

உலகளாவிய சிறுதானிய 2- நாள் மாநாட்டின் ஒரு பகுதியாக இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரச்சான்று ஆணையம் தொழில்நுட்ப அமர்வுகளை நடத்தியது.

வரும் காலத்தில் இளைய சமுதாயத்தினர் சிறுதானிய உணவை  முக்கிய உணவாக எடுத்துக்கொள்வதற்கு புத்தாக்கம், செயலாக்கம் மற்றும் சந்தைப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டு வருவதாக உலகம் முழுவதிலும் இருந்து வந்துள்ள நிபுணர்கள் மற்றும் இந்தத் தொழில்துறையின் உறுப்பினர்கள் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல்வாழ்வுத்துறை அமைச்சகத்தின் சார்பில் நடத்தப்பட்ட இந்த மாநாட்டில் தெரிவித்துள்ளனர்.

இந்த மாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். அதன் பின்னர், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரச்சான்று ஆணையம் தொழிநுட்ப அமர்வுகளை நடத்தியதன் மூலம், சிறுதானிய பயிர்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் ஊக்குவித்தல் நடவடிக்கைகள்  குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

 

SM/GS/RS/KRS



(Release ID: 1908901) Visitor Counter : 110


Read this release in: English , Urdu , Marathi , Hindi