நிலக்கரி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாட்டில் நிலக்கரியின் ஆண்டு உற்பத்தி மற்றும் நுகர்வு

இடுகை இடப்பட்ட நாள்: 20 MAR 2023 5:27PM by PIB Chennai

நடப்பு 2022-23-ஆம் நிதியாண்டில் (பிப்ரவரி, 2023 வரை) நாட்டில் 785.24 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே கால கட்டத்தில் 681.98 மில்லியன் டன்னாக இருந்தது. கடந்த நிதியாண்டை விட இந்த நிதியாண்டில் 15.14 சதவீதம் அதிகமாக நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 2021-22-ஆம் நிதியாண்டில் 778.19 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டது. 2020-21-ம் நிதி ஆண்டு 716.08 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டது.

நடப்பு 2022-23-ம் நிதி ஆண்டில் டிசம்பர், 2022 வரை 186.08 மில்லியன் டன் நிலக்கரி  இறக்குமதி செய்யப்பட்டது. பிப்ரவரி 2023 வரை 794.96 மில்லியன் டன் அளவிற்கு உள்நாட்டில் நிலக்கரி விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

இத்தகவலை மத்திய நிலக்கரி, சுரங்கங்கள் துறை அமைச்சர் திரு பிரல்ஹத் ஜோஷி மாநிலங்களவையில் தெரிவித்தார்.

***

SRI/IR/AG/KRS


(வெளியீட்டு அடையாள எண்: 1908889) வருகையாளர் எண்ணிக்கை : 186
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi