பாதுகாப்பு அமைச்சகம்
பாதுகாப்பு உபகரண உற்பத்தியில் தன்னிறைவு
प्रविष्टि तिथि:
20 MAR 2023 4:15PM by PIB Chennai
2018-19 ஆம் ஆண்டு முதல் 2022 டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் பாதுகாப்புத் துறைக்கான இறக்குமதி 46 சதவீதத்திலிருந்து 36.7 சதவீதமாக குறைந்திருக்கிறது.
பாதுகாப்புத் துறையில் தற்சார்பு நிலையை எட்ட ஏதுவாக மத்திய பாதுகாப்பு அமைச்சகம் 411 முக்கிய ராணுவ உபகரணங்களை உள்ளடக்கிய உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் 4 கருவிகள் குறித்த அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது. இதே போல் 26,000-க்கும் மேற்பட்ட ராணுவ உபகரணங்கள் ஸ்ரீஜன் இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தை தேவையை கருத்தில் கொண்டு 7,031 கருவிகள் ஏற்கனவே உள்நாட்டுமயமாக்கப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் இன்று எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு.அஜய் பட் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
*****
(Release ID: 1908804)
TV/ES/RR/KRS
(रिलीज़ आईडी: 1908827)
आगंतुक पटल : 197