அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
பூஞ்சை மூலக்கூறில் உருவான லாகேஸ் என்ற நொதி சாய கழிவுகளை சிதைக்கும் திறன் கொண்டுள்ளது
Posted On:
19 MAR 2023 6:10AM by PIB Chennai
பூஞ்சைகளினால் உருவாக்கப்பட்ட லாக்கேஸ் என்ற நொதி, ஜவுளித்துறையில் ஆடைகளுக்கு சாயமேற்றிய பிறகு நீர் நிலைகளில் திறந்து விடப்படும் அபாயமான சாயக்கழிவுகளின் மூலக்கூறுகளை சிதைக்கும் திறன் கொண்டதாக கண்டறியப்பட்டுள்ளது. இது சாயக்கழிவுகளை இயற்கையான முறையில் சுத்திகரிக்க உதவுவதால், சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்க உதவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தாவைச் சேர்ந்த பேராசிரியர் ரஞ்சித் பிஸ்வாஸ் மற்றும் டாக்டர். சுமன் சக்ரவர்த்தி ஆகியோர் இணைந்து இதற்கான சோதனையை மேற்கொண்டுள்ளனர். புற ஊதாக்கதிர் ஸ்பெக்ட்ரோஸ்கோபி மற்றும் கணினி உருவகப்படுத்துதல்களை இணைத்து, பல கரிம சாய மூலக்கூறுகள் லாக்கேஸ் நொதி மூலம் சிதைக்கப்படலாம் என்பதை அவர்கள் நிரூபித்துள்ளனர். பூஞ்சைகளின் குழுவால் உருவாக்கப்பட்ட லாக்கேஸ், இரண்டு வெவ்வேறு ஆக்சிஜனேற்ற நிலைகளில் 4 தாமிர அணுக்களைக் கொண்டுள்ளது. ரெடாக்ஸ் எதிர்வினைகள் மூலம் மூலக்கூறுகளை சிதைப்பதோடு, தண்ணீர் மற்றும் கார்பன், நைட்ரஜன் மற்றும் கந்தகத்தின் குறைவான வீரியம் கொண்ட ஆக்சைடுகளை மட்டும் உருவாக்குகிறது.
------
AD/CH/KPG
(Release ID: 1908532)
Visitor Counter : 213