ஆயுஷ்
பாரம்பரிய மருத்துவ அறிவாற்றலைப் பாதுகாக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள்
Posted On:
17 MAR 2023 4:45PM by PIB Chennai
பாரம்பரிய மருத்துவ முறைகளின் செயல்முறைகள் மொத்தம் 4,48,764, பாரம்பரிய அறிவாற்றல் டிஜிட்டல் நூலகத்தில் (டிகேடிஎல்) பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 1,27,533 ஆயுர்வேத மருத்துவ செயல் முறைகளும், 2,40,850 யுனானி மருத்துவ செயல்முறைகளும், 70,158 சித்த மருத்துவ முறைகளும், 4,778 யோகா நுட்பங்களும் அடங்கும்.
பாரம்பரிய அறிவாற்றல் டிஜிட்டல் நூலகம் என்பது இந்திய பாரம்பரிய நடைமுறைகள் தொடர்பாக தகவல் தொகுப்புகளை நிர்வகிக்கும் தரவுத் தொகுப்பாகும். இது 2001ம் ஆண்டு நிறுவப்பட்டது. அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி கவுன்சிலான சிஎஸ்ஐஆரும், இந்திய மருத்துவமுறைகள் துறையும் இணைந்து இதை ஏற்படுத்தியுள்ளன.
இந்திய மருத்துவ முறைகளான ஆயுர்வேதம், சித்தா, யுனானி, யோகா உள்ளிட்டவை தொடர்பாக சமஸ்கிருதம், இந்தி, அரபி, பெர்சியன், உருது, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பழங்கால நூல்களில் உள்ள தகவல்கள் இந்த டிகேடிஎல் தளத்தில் இடம்பெற்றுள்ளன. இந்தத் தகவல்கள் ஆங்கிலம், பிரெஞ்ச், ஜெர்மன், ஜப்பான் ஆகிய 5 சர்வதேச மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டு, டிகேடிஎல் தரவு தளத்தில் இடம்பெற்றுள்ளன. காப்புரிமைத் தொடர்பான தகவல்களையும் டிகேடிஎல் தளம் பராமரிக்கிறது. இதன் மூலம் இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகள் தொடர்பான அறிவையும், உரிமைகளையும் தவறாக பயன்படுத்துவதிலிருந்து பாதுகாப்பு வழங்கும் தளமாகவும் டிகேடிஎல் செயல்படுகிறது.
இந்த தகவலை ஆயுஷ் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
***
AP/PLM/RS/KRS
(Release ID: 1908095)
Visitor Counter : 155