மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
மீன்வளத்துறையின் சாகர் பரிக்ரமா திட்டத்தின் 4-வது கட்டம் நாளை முதல் தொடங்குகிறது
Posted On:
17 MAR 2023 11:56AM by PIB Chennai
மீன்வளத்துறை சார்பில் நடத்தப்படும் சாகர் பரிக்ரமா முன்முயற்சியின் 4-வது கட்டம் கர்நாடகாவில் நாளை தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. உத்தர கன்னடா மாவட்டத்தில் நாளையும், உடுப்பி மற்றும் தட்சண கன்னடாவில் 19 மார்ச் 2023 அன்றும் நடைபெறுகிறது.
மீன்வளத்துறை அமைச்சகத்தின் திட்டங்கள் தொடர்பாக மீனவர்களுக்கு எடுத்துரைக்கவும், அவர்களது பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும், மீனவர்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக ஆலோசனைகளை தெரிவிக்கவும், சாகர் பரிக்ரமா திட்டத்தின் கீழ் முகாம்கள் நடத்தப்படுகிறது.
இதில் பிரதமரின் மத்ஸய சம்படாத் திட்டம், மாநிலத் திட்டங்கள் உட்பட பல்வேறு திட்டங்கள் தொடர்பாக மீனவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். சிறப்பாக செயல்பட்ட மீனவர்களுக்கு பாராட்டு தெரிவித்து சான்றிதழ்கள் வழங்கப்படும். பிரதமரின் மத்ஸய சம்படாத் திட்டத்தின் கீழ் பயன்பெற தேர்வு செய்யப்பட்ட மீனவர்களுக்கான ஒப்புதல் ஆணைகளும் நிகழ்ச்சியில் வழங்கப்படும்.
கர்நாடகாவில் 18 மார்ச் 2023 அன்று நடைபெறும் சாகர் பரிக்ரமாவின் போது, சாகர் பரிக்ரமா தொடர்பாக கன்னட மொழியில் உருவாக்கப்பட்ட பாடல் ஒன்றும் வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மத்திய மீன்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா, மீன்வளத்துறை இணையமைச்சர்கள் திரு சஞ்சய் குமார் பல்யான், திரு எல் முருகன் உள்ளிட்டோரும் கர்நாடகா அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளும் கலந்துகொள்கின்றனர்.
சாகர் பரிக்ரமாவின் முதல் மூன்று கட்டங்கள் குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்கள் மற்றும் டையு-டாமன் யூனியன் பிரதேசத்தில் மொத்தம் 15 இடங்களில் நடைபெற்றன.
***
SRI/PLM/RS/KRS
(Release ID: 1907959)
Visitor Counter : 167