உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்

உடான் திட்டத்தின் கீழ் 469 வழித்தடங்களை இணைக்கும் வகையில் 74 விமான நிலையங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது

Posted On: 16 MAR 2023 5:10PM by PIB Chennai

உடான் திட்டத்தின் கீழ் 28.02.2023 வரை 469 வழித்தடங்களை இணைக்கும் வகையில் 74 விமான நிலையங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் விமான நிறுவனங்களுக்குப் பல்வேறு சலுகைகள் அளிக்கப்படுகின்றன. அதன்படி, பிராந்திய இணைப்பு திட்ட விமானங்களுக்கு, இறங்குவது மற்றும் நிறுத்துமிடத்திற்கான கட்டணம் விதிக்கப்படுவதில்லை. தமிழ்நாட்டில் 2018-ம் ஆண்டு முதல் சேலத்தில் (முதல் சுற்று) இவ்வகை விமான நிலையங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

இத்தகவலை விமானப் போக்குவரத்து அமைச்சர் திரு ஜோதிர் ஆதித்ய சிந்த்யா, மக்களவையில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார்.

***

SRI/IR/RJ/KRS(Release ID: 1907770) Visitor Counter : 124


Read this release in: English , Urdu , Manipuri