மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்

'அடிப்படை கால்நடை கணக்கெடுப்பு 2022' வெளியீடு

Posted On: 15 MAR 2023 5:52PM by PIB Chennai

மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா, மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர்கள் டாக்டர் எல். முருகன் மற்றும் திரு. சஞ்சீவ் குமார் பல்யான் ஆகியோர்  முன்னிலையில் ‘அடிப்படை கால்நடை கணக்கெடுப்பு 2022' வெளியிட்டார். மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறையின் வருடாந்திர வெளியீடான இந்த கணக்கெடுப்பை இன்று வெளியிட்ட அமைச்சர், இந்தக் கணக்கெடுப்பை வெளியிட்டதற்காக கால்நடை பராமரிப்புப் புள்ளியியல் பிரிவை பாராட்டினார்.

கால்நடைகளின் எண்ணிக்கை, கால்நடை உற்பத்தி மற்றும் கால்நடைகளுக்கு ஏற்படும்  நோய்கள், உள்கட்டமைப்பு போன்ற கால்நடை பராமரிப்புத் துறை தகவல்களைப் பற்றிய முக்கியமான புள்ளிவிவரங்களை இந்த வெளியீடு வழங்குகிறது. 2021-22 ஆம் ஆண்டிற்கான பால், முட்டை, இறைச்சி கம்பளி  ஆகிய நான்கு முக்கிய கால்நடைப் பொருட்களின் உற்பத்தி மதிப்பீடுகள் மற்றும் ஒருங்கிணைந்த மாதிரி ஆய்வின் பிற தொழில்நுட்ப அம்சங்கள் பற்றிய தரவுகளின் முதன்மை ஆதாரமாக இது உள்ளது.

இதோடு, சமீபத்திய 20வது கால்நடை கணக்கெடுப்பின்படி கால்நடைகளின் எண்ணிக்கை, கால்நடை மற்றும் கால்நடைப் பொருட்களின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தரவு, கால்நடை நோய் பாதிப்பு, உள்கட்டமைப்பு மற்றும் கால்நடைத் துறையின் பொருளாதார பங்களிப்பு போன்ற இரண்டாம் நிலைத் தரவுகளையும் இது கொண்டுள்ளது. இந்த வெளியீட்டில் உள்ள தகவல்கள், திட்டமிடல் மற்றும் கொள்கைகளை உருவாக்கும் நோக்கங்களுக்காக அனைத்து பங்குதாரர்களுக்கும், உலகம் முழுவதும் உள்ள ஆராய்ச்சி மற்றும் கல்வியாளர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த கணக்கெடுப்பின் வெளியீட்டை பின்வரும் இணைப்பில் பெறலாம்: https://dahd.nic.in/schemes/programmes/animal-husbandry-statistics

***

 

AD/SRI/KPG



(Release ID: 1907314) Visitor Counter : 337


Read this release in: English , Urdu , Hindi , Marathi