பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் நிலவும் சவால்கள் குறித்து விவாதிக்க கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் கீழ் கொல்கத்தாவில் 4-வது உரையாடலுக்கு வடகிழக்கு பிராந்திய இந்திய கடலோர காவல்படை ஏற்பாடு

प्रविष्टि तिथि: 15 MAR 2023 4:22PM by PIB Chennai

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் நிலவும் சவால்கள் குறித்து விவாதிக்க கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் கீழ் கொல்கத்தாவில் நடைபெற்று வரும் 3 நாள் உரையாடலுக்கு வடகிழக்கு பிராந்திய இந்திய கடலோரக் காவல்படை ஏற்பாடு செய்துள்ளது. இதில் இலங்கை, மாலத்தீவுகள், மொரிஷியஸ் ஆகிய நாடுகள் பங்கேற்றுள்ளன. மேலும் வங்கதேசம், செசல்லஸ் நாடுகளும் கலந்து கொண்டுள்ளன. இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் தேச விரோத சக்திகள் கடல்சார் மாசு போன்ற அச்சுறுத்தல்களில் இருந்து கடல் பிராந்தியத்தை பாதுகாப்பது தொடர்பான அம்சங்கள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

 கொழும்பு பாதுகாப்பு மாநாடு 2011-ம் ஆண்டு இந்தியா, இலங்கை, மாலத்தீவுகள் ஆகிய 3 நாடுகளுடன் அமைக்கப்பட்டது.  நான்காவது நாடாக மொரிஷீயஸ் பின்னர் சேர்த்துக்கொள்ளப்பட்டது. தற்போது சிறப்பு அழைப்பு நாடுகளாக வங்கதேசம், செசல்லஸ் நாடுகள் பங்கேற்கின்றன.

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பில் ஒத்துழைப்பை வழங்குவது இதன் முக்கிய நோக்கமாகும். இந்த பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி குறித்த பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கை செயல்படுத்தும் வகையில் ஒத்துழைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

***

AD/PKV/AG/KPG


(रिलीज़ आईडी: 1907273) आगंतुक पटल : 184
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Telugu