பாதுகாப்பு அமைச்சகம்

திருத்தப்பட்ட விதிமுறைகளின்படி IDEX திட்டத்தில் முதலாவது ஒப்பந்தத்தைப் பெறுவதில் இந்திய ராணுவம் முன்னிலை

Posted On: 14 MAR 2023 5:57PM by PIB Chennai

திருத்தப்பட்ட விதிமுறைகளின்படி பாதுகாப்புத் துறையில் சிறந்த புதிய கண்டுபிடிப்பு திட்டத்தின் முதலாவது கொள்முதலுக்கான ஒப்பந்தத்தைப் பெறுவதில் இந்திய ராணுவம் முன்னிலை வகிக்கிறது. உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த நடமாடும் உருமறைந்த தளவாட கொள்முதலுக்கான ஒப்பந்தத்தில் எந்திரவியல் படைப்பிரிவு கையெழுத்திட்டுள்ளது. ஹைப்பர் ஸ்டீல்த் டெக்னாலாஜிஸ்  என்ற தனியார் புத்தொழில் நிறுவனத்துடன் இந்த ஒப்பந்தம் இன்று (14.03.2023) புதுதில்லியில் கையெழுத்தானது. சேனா பவனில் நடைபெற்ற இதற்கான நிகழ்வில் ராணுவ துணைத்தலைமை  தளபதி லெப்டினன்ட்  ஜெனரல்  ஜெபி சவுத்ரி, பாதுகாப்புத் தளவாட உற்பத்தித் துறையின் இணைச் செயலாளர் திரு அனுராக் பாஜ்பாய்  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பாதுகாப்புத் துறைக்கான தலைசிறந்த கண்டுபிடிப்பு அமைப்பான ஐடெக்ஸ் என்பது 2018ம் ஆண்டு நடைபெற்ற இந்திய பாதுகாப்புத் துறை கண்காட்சியின் போது, பிரதமரால் தொடங்கப்பட்டது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள், MSME உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள், புத்தொழில் நிறுவனங்கள், தனிநிலை கண்டுபிடிப்பாளர்களை ஈடுபடுத்தி பாதுகாப்பு மற்றும் விண்வெளித் துறையில் தொழில் நுட்பங்களை மேம்படுத்த ஊக்கமளிப்பதும், புதிய கண்டுபிடிப்புகளுக்கான சூழலை உருவாக்குவதும் இதன் நோக்கமாகும்.

இந்திய ராணுவத்தின் எஞ்சியுள்ள  ஐடெக்ஸ் திட்டங்கள் 2023 ஏப்ரல் மத்தியில் இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

                                            ------

AD/SMB/RS/KPG

 

 

 

 

***



(Release ID: 1906935) Visitor Counter : 124


Read this release in: English , Urdu , Hindi