எரிசக்தி அமைச்சகம்
தொடக்கத்தில் மின் இணைப்பை விரும்பாமல் பின்னர் விருப்பம் தெரிவித்த கூடுதல் வீடுகள் உட்பட சௌபாக்யா திட்டத்தின் கீழ் 2.86 கோடி வீடுகள் மின் இணைப்பைப் பெற்றுள்ளன: மத்திய மின் துறை அமைச்சர் திரு ஆர் கே சிங்
Posted On:
14 MAR 2023 4:11PM by PIB Chennai
மின் இணைப்பு பெறாத அனைத்து ஊரகப்பகுதி வீடுகளுக்கும் ஏழ்மையான நகர்ப்புற வீடுகள் அனைத்திற்கும் மின் இணைப்பு வழங்குவதை நோக்கமாகக் கொண்டு 2017 அக்டோபரில் பிரதமரின் அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்கும் சௌபாக்யா திட்டம் மத்திய அரசால் தொடங்கப்பட்டது. 31.03.2022 நிலவரப்படி இந்தத் திட்டத்தின் மூலம் தொடக்கத்தில் மின் இணைப்பை விரும்பாமல் பின்னர் விருப்பம் தெரிவித்த கூடுதல் வீடுகள் உட்பட சௌபாக்யா திட்டத்தின் கீழ் 2.86 கோடி வீடுகள் மின் இணைப்பைப் பெற்றுள்ளன.
அசாம், சத்தீஷ்கர், ஜார்க்கண்ட், கர்நாடகா, மணிப்பூர், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் 31.03.2021 நிலவரப்படி 100 சதவீத வீடுகளும் மின் இணைப்பை பெற்றுள்ளன. சௌபாக்யா திட்டம் தொடங்கப்பட்ட பின், இம்மாநிலங்களில் 2.817 கோடி வீடுகள் மின்இணைப்புகளைப் பெற்றுள்ளன. தற்போது திருத்தியமைக்கப்பட்ட விநியோகத்துறை திட்டத்தின் கீழ் மின்மயத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் மத்திய அரசால் வெளியிடப்பட்டன. இது தொடர்பான தங்களின் திருத்தியமைக்கப்பட்ட விநியோகத்திட்டத்தை தெரிவிக்குமாறு மாநிலங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
இந்தத் தகவலை மத்திய மின்துறை அமைச்சர் திரு ஆர் கே சிங் இன்று மாநிலங்களவையில் தெரிவித்தார்.
***
AD/SMB/RS/RR
(Release ID: 1906852)
Visitor Counter : 157