உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்

உணவுப் பதன பூங்காக்கள்: தமிழ்நாட்டில் ஒரு மெகா உணவுப் பூங்கா, 16 ஒருங்கிணைந்த குளிர்பதன கிடங்கு வசதிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது

Posted On: 14 MAR 2023 3:37PM by PIB Chennai

தமிழ்நாட்டில் ஒரு மெகா உணவுப் பூங்கா, 16 ஒருங்கிணைந்த குளிர்பதன கிடங்கு வசதி, 11 வேளாண் பதனத் தொகுப்பு, 32 வேளாண் உணவுப்பதன அலகுகள், 9 வேளாண் பொருட்களுக்கான உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதல் தொடர்புகள், 2 காய்கறி விற்பனை சந்தைகள் ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் ஒரு ஒருங்கிணைந்த குளிர்பதன கிடங்கு வசதி ஏற்படுத்தவும், மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 

இது தவிர, நாடு முழுவதும் பிரதமரின் கிசான் சம்பதா திட்டத்தின் கீழ், மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்கள் வாரியாக அனுமதியளிக்கப்பட்ட திட்டங்கள் குறித்த விவரங்களை மத்திய உணவுப்பதன தொழில்கள் துறை இணையமைச்சர் திரு பிரகலாத் சிங் பட்டேல் இன்று மக்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.

பிரதமரின் கிசான் சம்பதா துணைத் திட்டத்தின் கீழ், 2022-23ம் நிதியாண்டில் 28.02.2023 நிலவரப்படி, மெகா உணவுப் பூங்கா அமைக்க ரூ.15.20 கோடியும், வேளாண் பொருட்கள் பதனத்தொகுப்புக்கு அடிப்படை கட்டமைப்பை உருவாக்க ரூ.36.59 கோடியும், உணவுப்பதன மற்றும் பாதுகாப்பு திறன்களை உருவாக்கவும், விரிவுபடுத்தவும்  ரூ.103.35 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

***

SRI/SMB/RS/RR



(Release ID: 1906788) Visitor Counter : 201


Read this release in: English , Urdu , Manipuri