உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்
உணவுப் பதப்படுத்துதல் துறையில் உற்பத்தி சார்ந்த ஊக்குவிப்புத் திட்டம்
प्रविष्टि तिथि:
14 MAR 2023 3:36PM by PIB Chennai
உணவுப் பதப்படுத்துதல் துறையில் உற்பத்தி சார்ந்த ஊக்குவிப்புத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை 31.03.2021 அன்று ஒப்புதல் அளித்ததாக மத்திய உணவுப் பதப்படுத்துதல் தொழில்துறை இணை அமைச்சர் திரு பிரகலாத் சிங் படேல் கூறியுள்ளார். மக்களவையில் இன்று எழுத்து மூலம் அளித்த பதிலில், ரூ.10,900 கோடி ஒதுக்கீட்டில் சர்வதேச சந்தைகளில் இந்திய வணிக முத்திரையுடன் கூடிய உணவுப் பொருட்கள் இடம் பெறுவதற்கு ஏற்ப உலக அளவிலான உணவு நிறுவனங்களின் ஆதரவை உருவாக்கும் வகையில், இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்று கூறியுள்ளார். உணவுப் பதப்படுத்துதல் துறையில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தவும் இது வழிவகுக்கும். சமைப்பதற்கு தயாரான / உண்பதற்கு தயாரான சிறுதானிய உணவுப் பொருட்கள், பதப்படுத்தப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்கள், கடல் சார் பொருட்கள், பாலாடைக் கட்டி உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்யும் 4 பெரிய பிரிவுகள் இத்திட்டத்தின் கீழ் செயல்படும். 2-வது பிரிவாக முட்டைகள், கோழியிறைச்சி, முட்டைப் பொருட்கள் ஆகியவற்றைப் பதப்படுத்தும் 4 பிரிவுகளும் செயல்படும்.
நாகாலாந்திலிருந்து ஒரு நிறுவனம், அசாமிலிருந்து இரண்டு நிறுவனங்களும், இந்தத் தொழிலுக்காக விண்ணப்பித்ததில் அவை தேர்வு செய்யப்பட்டுள்ளன.
----
AD/PKV/KPG
(रिलीज़ आईडी: 1906747)
आगंतुक पटल : 278