வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஒட்டுமொத்த விலைக் குறியீட்டு எண் அடிப்படையிலான பணவீக்க விகிதம், பிப்ரவரி 2023-இல் 3.85%ஆக பதிவு

Posted On: 14 MAR 2023 11:59AM by PIB Chennai

2023 பிப்ரவரி மாதத்திற்கான அகில இந்திய மொத்த விற்பனை விலை குறியீட்டு எண் அடிப்படையில் வருடாந்திர பணவீக்க விகிதம் (தற்காலிக) 3.85% அளவுக்கு பதிவானது. இது 2023 ஜனவரியில் 4.73%ஆக இருந்தது.

கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு, உணவு மற்றும் உணவு அல்லாத பொருட்கள்,  தாதுக்கள், கணினி, மின்னணு மற்றும் ஒளியியல் சார்ந்த பொருட்கள், ரசாயனம் மற்றும் ரசாயனப் பொருட்கள், மின்சார சாதனங்கள் மற்றும் மோட்டார் வாகனங்கள் முதலியவற்றின் விலை குறைந்திருப்பதால், 2023 பிப்ரவரியில் பணவீக்க விகிதம் குறைந்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1906661

***

AD/RB/RR


(Release ID: 1906724) Visitor Counter : 205