பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

ஏக்லவியா மாதிரி உண்டு - உறைவிடப் பள்ளிகளில் பழங்குடியின மாணவர்கள் 3.5 லட்சம் பேருக்கு சேவையாற்றும் வகையில் 38,800 ஆசிரியர்கள், 740 துணைப் பணியாளர்களை தேர்வு செய்ய 2023-24 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது

Posted On: 13 MAR 2023 6:00PM by PIB Chennai

நாட்டின் தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின மாணவர்கள் கல்வியில் சிறந்த வாய்ப்பை பெறும் வகையில் (6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை), தரமான கல்வி அளிப்பதற்காக மத்திய அரசின் சார்பில் ஏக்லவியா மாதிரி உண்டு - உறைவிடப் பள்ளிகள் திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. 2011-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி குறைந்தது 20,000 பழங்குடியினர் மற்றும் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் வசிக்கும் பழங்குடியினர் பகுதிகளில் ஏக்லவியா மாதிரி உண்டு - உறைவிடப் பள்ளிகளை அமைக்க அரசு முடிவு செய்தது.  அவர்களுக்கு அங்கு தரமானக் கல்வி இலவசமாக அளிக்கப்பட்டு வருகிறது.

ஒரு மாணவருக்கு ஆண்டுக்கு ரூ.1.09 லட்சம் செலவிடப்படுகிறது. நாடு முழுவதும் இதுவரை 690 பள்ளிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு 401 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

ஏக்லவியா மாதிரி உண்டு - உறைவிடப் பள்ளிகளில் பழங்குடியின மாணவர்கள் 3.5 லட்சம் பேருக்கு சேவையாற்றும் வகையில் 38,800 ஆசிரியர்கள் 740 துணைப் பணியாளர்களை தேர்வு செய்ய 2023-24 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை பழங்குடியினர் நலத்துறை இணையமைச்சர் திருமதி ரேணுகா சிங் சாருதா மக்களவையில் தெரிவித்தார்.

                                                                                         **

AP/IR/RJ/KPG



(Release ID: 1906532) Visitor Counter : 221


Read this release in: English , Urdu , Hindi