தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அமைப்பு சாரா தொழிலாளர்களின் விரிவான தரவை உருவாக்க மத்திய அரசின் ஈ-ஷ்ரம் இணையதளம் வகை செய்கிறது

Posted On: 13 MAR 2023 5:11PM by PIB Chennai

அமைப்பு சாரா தொழிலாளர்களின் விரிவான தரவை உருவாக்க மத்திய அரசின் ஈ-ஷ்ரம் இணையதளம் வகை செய்கிறது என்று மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத்துறை இணையமைச்சர் திரு ரமேஷ்வர் தெலி தெரிவித்துள்ளார்.

மக்களைவில் இன்று எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அவர் அளித்துள்ள பதிலில், அமைப்பு சாரா தொழிலாளர்களின் விரிவான தரவை ஏற்படுத்த ஈ-ஷ்ரம் இணையதளத்தில் அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்களும் பதிவு செய்ய வலியுறுத்தப்பட்டு வருகிறது என்றும் இதன் மூலம் அவர்கள் குறித்த அனைத்து தரவுகளும் இந்த தளத்தில் இடம் பெறுகின்றன என்றும் கூறினார். 

தற்போது இந்த இணையதளத்தில் 28 கோடியே 62 லட்சத்து 55 ஆயிரத்து 105 தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். பதிவுக்குப் பிறகு தொழிலாளர்களுக்கு தனிக்கணக்கு எண் அளிக்கப்படுகிறது.  ஈ-ஷ்ரம் இணையதளத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்களை பதிவு செய்வதற்காக பொது சேவை மையம் மற்றும் மாநில சேவை மையங்களில் ஒரு தொழிலாளர் குறித்த தகவல்களை பதிவு செய்வதற்கு ரூ.20-ஐ மத்திய அரசு வழங்குகிறது. அதன்படி 2022 டிசம்பர் வரை பொது சேவை மையங்களுக்கு ரூ.347 கோடியும், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ரூ. 19.07 கோடியும் அளிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 5, 2023 வரை தமிழ்நாட்டில் 83 லட்சத்து 86 ஆயிரத்து 619 தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர் என்று அமைச்சர் தெலி கூறியுள்ளார்.

***

AP/IR/RJ/KPG


(Release ID: 1906502) Visitor Counter : 288


Read this release in: English , Urdu