பாதுகாப்பு அமைச்சகம்

பாதுகாப்புத்துறை ஏற்றுமதி

Posted On: 13 MAR 2023 2:57PM by PIB Chennai

சிறப்பு ரசாயனங்கள், உபகரணங்கள் போன்றவற்றில் பிரிவு 6ல் உள்ள போர் தளவாடப் பொருட்களை ஏற்றுமதி செய்ய பாதுகாப்பு உற்பத்தித் துறை அனுமதி அளித்துள்ளது. இதன்படி கண்ணீர் புகை இயந்திரங்கள், எச்சரிக்கை கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டுக் கருவிகள், இரவில் பயன்படுத்தும் மோனோக்குலர்கள் மற்றும் பைனாக்குலர்கள், இலகுரக எடை கொண்ட டார்பெடோ மற்றும் தீ கட்டுப்பாட்டுக் கருவிகள், கடலோர கண்காணிப்பு ரேடார்கள் உள்ளிட்டவை கடந்த 5 ஆண்டுகளில் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. தற்போது 80க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா பாதுகாப்பு உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்கிறது.

2017-18 ம் ஆண்டில் பாதுகாப்பு உற்பத்திப் பொருட்களின் மொத்த ஏற்றுமதி மதிப்பு ரூ.4682 கோடியாக இருந்தது. 2022-2023ம் ஆண்டில் இதுவரை இவற்றின் ஏற்றுமதி ரூ.13,399 கோடியாக உள்ளது.

பாதுகாப்புத் துறைப் பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்கவும் உலகளவில் போட்டித் தன்மையை அதிகரிக்கவும் இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தற்சார்பு இந்தியா இயக்கத்தின் கீழ் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் உருவாக்கப்படும் புதிய தொழில்நுட்பங்கள், எந்தவித கட்டணமுமின்றி தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்றன.

இந்த தகவலை மாநிலங்களவையில் எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில் பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் திரு. அஜய் பட் தெரிவித்துள்ளார்.

***

PKV/PLM/SG/KPG



(Release ID: 1906375) Visitor Counter : 122


Read this release in: English , Urdu , Marathi